
தேவையற்ற சர்ச்சைகளில் அமெரிக்காவை மாட்டி விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி 250 ,000 ஆவணங்களை நேற்று பகிரங்கப்படுத்திய விக்கிலீக்ஸ் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நாட்டின் முக்கிய ரகசிய ஆவணங்களை திருட்டுத்தனமாக இணையத்தை பயன்படுத்தி எடுத்திருப்பதால் இது ஒரு சைபர் தாக்குதல் எனவும் அமெரிக்கா வருணித்துள்ளது. விக்கிலீக்ஸ் " தீவிரவாதிகளின் கூடாரம் " என அமெரிக்கா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் ஹிலாரி கிளிண்டனின் பிற நாடுகளை வேவு பார்க்கும் வேலைகள் உள்ளிட்ட பல விடயங்களும் அம்பலமானதால் விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வருவது தெரிய வருகிறது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளுக்கும் எதிர்ப்பான ஒன்று என ஆவேசமாகக் கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF