அமெரிக்காவில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அதிபர் ஒபா மாவின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு குறித்து மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் ஒபாமா வுக்கு எதிராக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
அவர்கள் வருகிற 2012-ம் ஆண்டு மீண்டும் அவர் அதிபராக கூடாது என தெரிவித்தனர். 41 சதவீதம் பேர் மட்டுமே அவர் மீண்டும் அதிபராக ஆதரவளித்துள்ளனர். அதே போல குன்னிபியாக் பல்கலைக்கழகத்தின் தேர்தல் பிரிவு மாணவர்கள் நாடு முழுவதும் டெலிபோன் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்தினர். 2424 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பிலும் இதே கருத்துதான் நிலவியது.
இதன் மூலம் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி, மிக் ஹீகாய ஆகியோர் ஒபாமாவுக்கு போட்டியாக திகழ்கின்றனர். அதே நேரத்தில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர்கள் இன்னும் எந்தவித முடிவுக்கும் வரவில்லை. 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்ய வில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF