டெல்லியில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்த கோரமான விபத்தில்
சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் மட்டுமே ஆவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகரில், லலிதா பார்க் ஏரியாவில் உள்ள இவ் அடுக்குமாடி குடியிருப்பு நேற்றிரவு உள்ளூர் நேரம் 8.15 மணியளவில் இடிந்துள்ளது.
64 பேர் இதில் பலியாகியிருப்பதை டெல்லி சுகாதரத்துறை அமைச்சர் கிரண் வலியாவும் 80 பேர் படுகாயமடைந்ததை பொலிஸ் கமிஷினர் பீ கே குப்தாவும் உறுதிப்படுத்தினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக லோக் நாயக் ப்ரகாஷ் நாராயன் மருத்துவமனைக்கும், குரு டெக் பஹதூர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
யமுனா நதியின் வெள்ளப்பெருக்கினால் இவ் அடுக்கு மாடி குடியிருப்பு தொகுதி பிரதேசம், பாதிக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ந்து பெய்து வந்த கடும் மழையினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இது ஒரு பழைய குடியிருப்பு தொகுதி என்பதால், இதன் அடித்தளம் உறுதியில்லாது இருந்தமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நிதி அமைச்சர் ஏகே வலியா தெரிவித்துள்ளார்.