ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது. சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம். இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும். முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது
