
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு, இந்தோனேசியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தெற்காசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான ஜகார்த்தா பள்ளிவாசலில் சிறப்புரை நிகழ்த்தினார். அமெரிக்க-இந்தோனேசிய இருநாட்டு நல்லுறவு பற்றி அவருடைய உரை அமைந்திருந்தது.
1998 ம் ஆண்டுடன் இந்தோனேசியாவில் முடிவுற்ற 'சுஹாத்ரோ' சர்வாதிகாரத்தை தொடர்ந்து, இந்தோனேசியா ஓர் ஜனநாயக குடியரசாக அபிவிருத்தி அடைந்துவருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இஸ்டிக்லால் பள்ளி வாசலிலும் அவர் தொடர்ந்து உரையாற்றவிருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டார் ஒபாமா. ஏற்கனவே இரண்டு தடவை அவருடைய இந்தோனேசிய விஜயம் இடைநிறுத்தப்பட்டிருந்தது பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF