Sunday, November 21, 2010

ஆப்கன் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவமே பார்த்துக் கொள்ளும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து



ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஆப்கனின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு இராணுவமே முற்றிலும் கவனித்துக் கொள்ளும்படியான் கூட்டு ஒப்பந்தமொன்றில் நேட்டோ தலைவர்கள் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

2015 க்குள் பிரிட்டன் படைகள் முற்றிலுமாக ஆப்கனிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்பதை பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயை சந்தித்து அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா இது குறித்த பேச்சு வார்த்தையையும் நடத்தியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளன என தலிபான் இயக்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது என்ற அதிகார பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. 9 வருடங்களாக ஆப்கனில் இருந்ததில் மிகப்பெரிய இழப்பை தாங்கள் சந்தித்து விட்டதையும் நேட்டோ தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF