அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடனை எப்படியும் பிடித்துவிடும்நோக்கில் வேட்டை தொடர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் பீ ஜீ க்ரௌவ்லி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், நாங்கள் ஒசாமா பின்லாடனை பிடிப்பதற்கான வேட்டையை இன்னமும் ஆர்வத்துடன் மேற்கொண்டுவருகிறோம்.
எமக்கு பக்கபலமாக பாகிஸ்த்தான் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.
நாமும் எமது படை பலம் அனைத்தையும் திரட்டி மூர்க்கத்தனமான யுத்தம் மேற்கொண்டு வருகிறோம். பாகிஸ்த்தான் மக்களும் எமக்கு பக்கபலமாக இருக்கிறார். எமது பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையிலும், பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்.
பாகிஸ்த்தான் மக்கள் எவ்வகையில் தீவிரவாத அச்சுறுத்தலை உணர்கிறார்களோ அதே போன்றே அமெரிக்காவும் உணர்கிறது. எனவே மக்களுடன் இணைந்த கூட்டு நடவடிக்கை மூலமே ஒசாமாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF