வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 65 பேர் பலியானதுடன் சுமார் 80 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வெடிப்புச் சம்பவத்தின் போது பள்ளிவாசலினுள் சுமார் 300 பேர்வரை இருந்துள்ளனர். தலிபான் இயக்கத்தின் பாகிஸ்தானிய பிரிவு இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.
பல சிறுவர்கள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதுடன் , இரு சிறுவர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர்.