Thursday, November 11, 2010

பிரித்தானியாவில் மாணவர் புரட்சி வெடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சுமார் 30,000 யிரம் பேர் கலந்துகொண்ட மாணவர்கள் ஊர்வலத்தில் பெரும் கலாட்டா. பிரித்தானிய கான்சர்வேட்டிவ் தலைமைச் செயலகம் அடித்து நொருக்கப்பட்டதோடு, சில இடங்களையும் மாணவர்கள் தீயிட்டுக் கொழுத்தியும் உள்ளனர். சமீபத்தில் கான்சர்வேட்டிவ் கட்சி பல புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. அதில் மாணவர்களுக்கு கடன் வழங்குவதை ரத்துச்செய்தும், படிப்பிற்காக கட்டணத் தொகையை உயர்த்தியும் இருந்தது. இந் நிலையில், இன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கலாக சுமார் 30,000 ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட பிரித்தானியப் பொலிசார் சிலர் மாணவர்களைத் தாக்கியதால் கலவரம் வெடித்தது. அதில் பல மாணவர்கள் காயமடைந்ததால் மேலும் ஆத்திரமடைந்த மாணவர்கள் கான்சர்வேட்டில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். கலகம் அடக்கும் பொலிசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக இவ்வாறானதொரு கலகம் பிரித்தானியாவில் இடம்பெறவில்லை என்றும், பெரும் மாணவப் புரட்சி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் சிலர் எதிர்வு கூறுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF