Saturday, December 31, 2011

2500 யானைகள் 2011 ஆண்டில் தந்ததிற்காக உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டது!


யானை தந்ததிற்காக உலகம் முழுவதிலும் இருந்து 2500 யானைகள் 2011 ஆண்டில் கொல்லப்பட்டு இருப்பதாக சூற்றுசூழல் அமைப்பு அறிவித்துள்ளது.வாஷிங்டனை தலைமையமாக கொண்டு இயங்கும் சூற்றுசூழல் மையத்தின் கருத்துப்படி1989 ஆம் ஆண்டு யானை தந்ததிற்காக கொல்வது தடை செய்யப்பட்டது ஏனெனில் அந்த ஆண்டில் பல மிருகங்கள் கொல்லபட்டமையினால் ஆகும்.யானைகள் தொடர்பான ஆய்வாளர் மில்லிகேனின் கருத்துப்படி முதன்முதலில் பல யானைகள் தந்தத்தை பெருவதற்காக ஆசிய கண்டத்தில் கொல்லப்பட்டது பிற்காலத்தில் ஆபிரிக்க கண்டத்திலும் இந்த கொடூரம் தொடர்ந்தது என கூறினார்.இந்த ஆண்டில் மாத்திரம் பெரிய யானைகள் தந்ததிற்காக கொல்லப்பட்டது. இவற்றின் எடை கிலோ கிராம் என கூறினார்.


இந்த ஆண்டில் இறுதியாக யானை ஒன்று மார்கழி 21ஆம் திகதி மலேசியாவில் கொல்லப்பட்டது இந்த ஆப்பிரிக்க யானையின் தந்ததின் பெறுமதி மில்லியன் ஆகும்.கடந்த 23 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தான் மிகவும் அதிகளவில் யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

500 kmph வேகத்தில் பறக்கும் ரயில்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அந்த வகையில் 500 kmph பயணிக்க கூடிய ரயில் சேவையினை சீன நிறுவனம் ஒன்று பரீட்சித்துப் பார்த்துள்ளதுசீனாவின் மிகப் பெரிய railway கட்டுமான நிறுவனமான CSR Corp. Ltd இத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.


இத்திட்டத்திற்கு சீனா ரயில்பாதை திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 300 kmph வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவையினால் சுமார் 40 பேர் வரை மரணமடைந்துள்ளதால் அதிக வேக ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Liu Zhijun தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கண்ணைக் கவரும் வண்ண மீன்கள்!

இந்தப் பூங்காவில் வளர்க்கப்படும் பல வண்ணங்கள் நிறைந்த அழகான மீன்கள் பார்ப்பவர் மனதை மிகவும் கவருகின்றது.கூட்டம் கூட்டமான வளர்க்கப்படும் இந்த மீன்கள் பார்வையிடும் சுற்றுள்ளா பயணிகளை மிகவும் ஈர்க்கின்றது. பார்ப்பதற்கு பல வண்ணங்கள் ஒன்றாக அசைந்து நடனமாடுவது போன்று காட்சியளிக்கின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

NEWS OF THE DAY.

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் வாகன விபத்துக்களில் 10 போ் பலி.
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்  இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதவியா, அனுராதபுரம், மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.மாகோ, பாதுக்க மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கோட்டே மற்றும் மாரவில்ல ஆகிய பிரதேசங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர்.இதேவேளை, வீதி ஒழுக்க விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குருணாகல் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த நபர் மோதியுள்ளார்.
62 வயதான வயோதிபர் ஒருவரே ரயில் விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐ. தே. கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களின் பெயர்கள் விரைவில்! 
ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் கட்சித் தலைவரை பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சிலரின் பெயர்கள் ஏற்கனவே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி ஒழுக்க விதிகளை மீறியமைக்காக இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவின் அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்த முயற்சி � சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் தயாசிறியின் அரசியல் வாழ்க்கையை இல்லாதொழிக்கும் முயற்சியானது அரசாங்கத்தின் தேவைக்காக நடைபெறுகின்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து சஜித் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போராட்ட குணமுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொற்பளவிலேயே இருப்பதாகவும் அவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர்களை அழிக்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சுஜீவ சேனசிங்க, புத்திக்க பத்திரண ஆகியோரின் வரிசையில் தற்போது தயாசிறி ஜயசேகரவையும் இணைக்க முயற்சி செய்யப்படுகின்றது.இந்தநிலையில் தயாசிறி ஜயசேகர கட்சியில் உயர்பதவி வகிக்க வேண்டிய ஓர் உறுப்பினர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நான்காயிரம் வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்: நுகர்வோர் அதிகார சபை.
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் சட்டத்தை மீறிய நான்காயிரம் வர்த்தகர்களுக்கு எதிராக, இம்மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.நுகர்வோர் அதிகார சபையின் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில், இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அதன் தலைவர் றூமி மர்ஷூக் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, பொருட்களை பதுக்கி வைத்தல் ,மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை: ஜனாதிபதி மகிந்த.
அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை உடனடியாக உள்வாங்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நிர்வாக சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை தெளிவுபடுத்துவதற்காக அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக 296 இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர் கட்சி பேதங்களின்றி, குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்குள் மக்கள் எதிர்பார்க்கின்ற சேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு நிருவாக சேவை ஊழியர்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அரச கொள்கைகளுக்கமைய வருடந்தோறும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச முறைப்பாடுகள்..
கல்வித்துறையில் இலஞ்சம் தொடர்பாக பதிவாகின்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கல்வித்துறையில் 324 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஜயவிக்ரம தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் இடம்பெறும் முறைகேடுகள், பாடசாலை அபிவிருத்தியில் இடம்பெறும் ஊழல்கள் என்பனவும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பாடசாலை அதிபர்களுக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு பொலிஸ் திணைக்களம் தொடர்பில் 279 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதிக்குள் 43 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜமைக்கா தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி.
ஜமைக்கா நாட்டு நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஜமைக்கா உழைப்பாளர் கட்சியும், மக்கள் தேசிய கட்சியும் போட்டியிட்டன.அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 63 தொகுதிகளில் 41 தொகுதிகளை மக்கள் தேசிய கட்சி பிடித்தது. அதைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் போர்சியா சிம்சன் மில்லர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜப்பானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.
சுறுசுறுப்புக்கும், தொழில் முன்னேற்றத்துக்கும் பெயர் பெற்ற ஜப்பானிலும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.அந்த நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சதவீதம் அளவுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதுபோல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 14 சதவீதம் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.எனினும் இன்னமும் 5 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டும் இதே அளவிலான மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் இளைஞருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்.
பெண்களுக்கு கொடுமைகளை இழைத்தல், கொலை, கள்ளத்தொடர்பு, ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளை அடித்தல், போதை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு சவுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு விசாரணை விரைவில் முடிந்து தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில் சவுதியை சேர்ந்த சல்மான் அல்கமேடி என்பவருக்கும் அகமது அல்குடானி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கோபத்தில் அகமதுவை சல்மான் கொலை செய்தார். இந்த வழக்கு சவுதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சல்மானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ரியாத்தில் நேற்று சல்மானின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவருடன் சேர்த்து இந்த மாதம் மட்டும் 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 140 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் வலியுறுத்தி வருகிறது.
தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரிப்பு.
உலகம் முழுவதிலும் தந்தத்திற்காக 2500 யானைகள் 2011ம் ஆண்டில் கொல்லப்பட்டு இருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது.வாஷிங்டனை தலைமையமாக கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் மையம், 1989ம் ஆண்டு யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுவதை தடை செய்தது. ஏனெனில் அந்த ஆண்டில் பல மிருகங்கள் கொல்லப்பட்டன.
யானைகள் தொடர்பான ஆய்வாளர் மில்லிகேனின் கூறுகையில், முதன்முதலில் பல யானைகள் தந்தத்திற்காக ஆசிய கண்டத்தில் கொல்லப்பட்டது. பிற்காலத்தில் ஆப்ரிக்க கண்டத்திலும் இந்த கொடூரம் தொடர்ந்தது என்றார்.மேலும் இந்த ஆண்டில் இறுதியாக டிசம்பர் 21ஆம் திகதி ஒரு யானை மலேசியாவில் கொல்லப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தான் மிகவும் அதிகளவில் யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வட கொரியாவின் அடுத்த தலைவராக கிம் ஜாங் உன் தெரிவு.
வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராக கிம் ஜாங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார்.வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் இல் கடந்த 17ம் திகதி மாரடைப்பால் காலமானார். வட கொரிய அரசியலில் தொழிலாளர் கட்சி, இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் தான் பலம் வாய்ந்தவை.
இவை தான் நாட்டின் ஒவ்வொரு விடயத்திலும் முடிவெடுக்கும். மறைந்த தலைவர் கிம் ஜாங் இல் இந்த மூன்றுக்கும் தலைவராக இருந்தார். அவரது மறைவை அடுத்து அவரின் இளைய மகன் கிம் ஜாங் உன் இராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் தலைவராகவும் அவரை அரசு அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் அவர் வட கொரியாவின் சர்வாதிகாரம் படைத்த தலைவராகியுள்ளார். கிம் ஜாங் இல்லின் இரண்டாவது நாள் இறுதிச் சடங்கு தலைநகரில் உள்ள கிம் சங் சதுக்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜாங் உன்னுக்கு இராணுவ தளபதிகள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
தனக்கு வேண்டாதவர்களுக்கு இரகசியமாக அமெரிக்கா புற்றுநோயை பரப்பி வருகிறது: சாவேஸ்.
அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு இரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரெளசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆர்ஜெண்டீனா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை. அவர்கள்(அமெரிக்கா) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது. இந்த விடயத்தில் எனக்குத் தோன்றிய கருத்தை நான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன்.
ஏற்கெனவே 1946- 48ம் ஆண்டுகளில் கெளதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது தொடர்பாக ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா என்றார்.
ஈக்வடார், பொலிவியா நாட்டு ஜனாதிபதிகள் மீது இனி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறேன். அவர்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படலாம் என்று சாவேஸ் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கியூபா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நோயின்றி இருக்கிறேன் என்றார்.
ஈரானின் அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம்.
எண்ணெய் கப்பல்களை தடுத்து வழிமறிப்போம் என ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது: உலகின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் இந்தப் பிராந்தியம் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையானது பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போக்குவரத்தை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது.
இந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை மறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று லிட்டில் குறிப்பிட்டார்.
முன்னதாக ஈரான் துணை ஜனாதிபதி முகமது ரெஸ ராஹ்மி பேசுகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட பிற நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லிட்டில் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மூடுவது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை விட எளிதான செயல் என்று ஈரான் கடற்படை தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி குறிப்பிட்டிருப்பதும் அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை அனுமதிப்பது இப்பிராந்தியத்துக்கு மட்டுமல்ல பிற நாடுகள் வளம்பெறவும் மிகவும் அவசியமாகும். சர்வதேச கடல் பிராந்தியத்தில் போக்குவரத்துக்கு எவரேனும் இடையூறு செய்வார்களேயானால் அதை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது என்று பஹ்ரைன் கடற்படை பெண் கமாண்டர் அமி டெரிக் ஃபிராஸ்ட் தெரிவித்தார்.
பஹ்ரைனில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர்க்கப்பல் இப்பிராந்தியத்தில் சரளமான வர்த்தக போக்குவரத்தைக் கண்காணித்து வருவதோடு அதை சீர்குலைக்க முயல்வோரைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார் ஃபிராஸ்ட்.
ஐ.எஸ்.ஐ விளக்க கூட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு.
பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்திருந்த விளக்கக் கூட்டத்தை இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ரஸீல் ரப்பானி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவரரான குர்ஷித் அகமது ஆகிய இருவரும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்துக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் வந்து விளக்குவது தான் நடைமுறை. மாறாக ஐ.எஸ்.ஐ அலுவலகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வது சரியாக இருக்காது என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று இவர்களிருவரும் தெரிவித்தனர்.
பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ அளிக்கும் தகவல்கள் குறித்து அவர்கள் விளக்கினர். கூட்டத்தில் தான் பங்கேற்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் காஷியிடம் தெரிவித்துவிட்டதாக குர்ஷித் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ ஆகிய இரண்டுக்கும் உரிய மரியாதை தருகிறோம், அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காக இதில் பங்கேற்கவில்லை.
நாட்டில் நாடாளுமன்றம் தான் முதன்மையானது. அதிலுள்ள உறுப்பினர்கள் முன்பு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, ஐஎஸ்ஐ தலைமையகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வது சரியான நடைமுறையல்ல என்று ரப்பானி கருத்து தெரிவித்துள்ளார்.
துருக்கி வான்வெளித் தாக்குதல்: 23 பேர் பலி.
ஈராக்கின் எல்லைப் பகுதிக்கு அருகில் துருக்கி நடத்திய வான்வெளித் தாக்குதலில் குர்திஷ் இனத்தவர்கள் வாழும் கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர்.குர்திஷ் கிராமத்தினர் ஈராக்கிலிருந்து துருக்கிக்கு எரிவாயு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கடத்தி வந்தாகத் தெரிகிறது.
அப்போது நடந்த தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மாணவர் கொலை: அறிக்கை கேட்கிறது இங்கிலாந்து நாடாளுமன்றம்.
இந்தியாவின் புனே நகரை சேர்ந்தவர் அனுஜ் பித்வே. இவர் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்தார்.கிறிஸ்துமஸ் விடுமுறையில் நண்பர்களுடன் கடந்த திங்கள்கிழமை மான்செஸ்டர் சென்ற போது, மர்ம ஆசாமியால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை விவகார கமிட்டி தலைவருமான கீத் வாஸ், மாணவர் கொலைக்கு கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனுஜ் கொலை குறித்த முழு அறிக்கை அளிக்க காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள அவரது குடும்பத்தினருக்கு முழு உரிமை உள்ளது. இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கிலாந்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆளில்லா விமானங்கள் போன்று ஆளில்லா ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது அமெரிக்கா.
அமெரிக்கா டிரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா தானியங்கி விமானங்களை தயாரித்து, அதன் மூலம் மறைவிடங்களில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழித்து வருகிறது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி தாக்குதல் நடத்தியதில் 24 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பாகிஸ்தானின் ஷாம்சி விமானத்தளத்தை விட்டு அமெரிக்கா வெளியேறியது.அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா ஆளில்லாமல் பறக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களையும் தயாரித்துள்ளது.அதில் சக்தி வாய்ந்த கலர் வீடியோ கமெராக்களும் இடம் பெற்றுள்ளன. இதன் சோதனை ஓட்டம் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது.
சிரியாவில் தொடரும் போராட்டம்: 50 பேர் பலி.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது.இதில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தலைநகர் டமாஸ்கஸ் அருகே சதுக்கத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது, டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதற்கிடையே சிரியாவில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.சூடான் இராணுவ உளவுத்துறை அதிகாரி ஜெனரல் முகமது அகமது முஸ்தபா அல் தபாய் இக்குழுவுக்கு தலைவராக உள்ளார்.
கனடாவில் வீட்டின் விலை உயர்வு.
கனடாவில் 2010ம் ஆண்டில் வீட்டுக்கடனின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் பலரும் வீடு வாங்க முன்வந்தனர். ஆனால் தேவைக்கு ஏற்ப வீடுகள் விற்பனைக்கு கிடைக்கவில்லை. இதனால் வீடுகளின் விலை உயரத் தொடங்கியது.
சொந்த வீடு வாங்கும் ஆர்வமும், தேவையும் அதிகமானதாலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ற அளவு இல்லாததாலும் 5.8 சதவீதம் வரை 2010ம் ஆண்டில் வீட்டின் விலை உயர்ந்தது. இது சுமார் 339042 டொலர் அளவாகும்.2010ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதம் உயர்ந்தது. 2009ம் ஆண்டில் 308 பில்லியன் டொலராக இருந்த தொகையானது 2010ம் ஆண்டில் 330 பில்லியன் டொலராக உயர்ந்தது.
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டவர்கள் இன்று மூத்த குடிமக்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீட்டுத்தேவை 14 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக 2036ம் ஆண்டுக்குள் உயரும்.இந்த உயர்வு நேரடியாக வீடு, மனை விற்பனையைப் பாதிக்கும். இந்த மூத்த குடிமக்களுக்கு மாடிக்குடியிருப்புகளில் தனிவீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் அல்லது முதியோர் நலமையங்களைக் கட்டித்தர வேண்டும்.
இஸ்ரேலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்.
ஜெருசலேமிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் கட்டிடங்களைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஜெருசலேமின் நகராட்சிக்குழு பெரிய சுற்றுலா விடுதி ஒன்றைக் கட்டவும், யூதர்கள் தங்குவதற்கு 130 வீடுகள் கட்டவும் அனுமதி வழங்கியது.
பெத்லஹேம் நதரத்தின் அருகே யூதர்கள் தங்குவதற்காக 12 மாடிக் குடியிருப்புகள் மூன்று கட்டப்படும். இவற்றில் 130 வீடுகள் இருக்கும்.
பிரான்சின் வெளிவிவகாரத்துறை செய்தித் தொகுப்பாளர் பெர்னார்டு வலேரா கூறுகையில், கிழக்கு ஜெருசலேத்திலும், மேற்குக்கரையிலும் கட்டப்படவுள்ள இந்தக் கட்டிடங்கள் குறித்து பிரான்ஸ் அதிகம் கவலைப்படுகிறது.பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படாத பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை உடனே இடித்துத் தள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மாதம் வடமேற்குக் கரையில் உள்ள இராணுவத் தளத்தைத் தாக்கியதாக சந்தேகப்பட்டு ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை இஸ்ரேலியக் காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தப்பகுதியில் வந்து தங்கியவர்களும் தீவிரவலதுசாரி இயக்கத்தினரும் பாலஸ்தீனரையும், இஸ்ரேலிய ராணுவத்தையும் எதிர்த்து இது போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இங்கு தங்கியிருப்போரை இஸ்ரேல் அரசு வெளியேற்ற முயல்வதால் இவர்கள் அரசின் மீது கோபம் கொண்டவர்களாக வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டு குறித்து ஜேர்மானியர்கள் உற்சாகம்.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஜேர்மானியருக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்கிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த விபரங்கள் பின்வருமாறு, 49 சதவீத மக்கள் புத்தாண்டு குறித்த அச்சம் எதுவுமில்லை எனவும், 17 சதவீதம் பேர் இனி வரும் ஆண்டு எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.
63 ஆண்டுகளாக இந்தக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டு 56 சதவீதம் பேர் நம்பிக்கையோடு உற்சாகமாக இருக்கின்றனர்.ஜேர்மனியின் பிரபலமான எதிர்கால நிபுணரான மத்தியாஸ் ஹோர்க்ஸ், பொருளாதாரப் போக்குகள் குறித்தும், மனித நடத்தை குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் காணப்படுவது இயற்கை தான். ஏனெனில் நாம் காணும் கனவுகளைவிட நிஜம் வேறாக அமைந்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யூரோ மண்டல கடன் நெருக்கடியால் ஜேர்மனி பாதிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் வேலையில்லாத் திண்டாட்டம் 6.4 சதவீதமாக இருந்தது. 2011ம் ஆண்டில் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதத்தை எட்டியிருந்தது.எனவே தான் மொன்றியல் வங்கியின் சென்ற வார அறிக்கை, உலகின் பொருளாதாரச் சிறப்பு மிகுந்த ஏழு(G7) நாடுகளில் ஜேர்மனி முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 
ஈராக்கில் உள்நாட்டு கலவரம் ஏற்படாது: ஐ.நா உயரதிகாரி.
ஈராக்கில் உள்நாட்டு கலவரம் எதுவும் வெடிக்காது எனவும், அமைதியான சூழ்நிலை நிலவும் என்றும் தான் நம்புவதாக ஐ.நா.வின் உயரதிகாரி மார்ட்டின் காப்ளர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தாக்குதல்கள் நடைபெற்றதால் உள்நாட்டு போர் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவ்வாறு நிச்சயம் நடக்காது என்று காப்ளர் உறுதியளித்துள்ளார்.அமெரிக்க இராணுவம் ஈராக்கை விட்டு இந்த மாதத் தொடக்கத்திலேயே வெளியேறி விட்டன. இந்நிலையில் ஈராக்கில் வாழும் இரு முஸ்லிம் பிரிவினருக்கும் இடையே மோதல் உருவாகியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், பலர் காயம்பட்டனர். அதே போல் கடந்த வியாழக்கிழமை(22.12.2011) நடந்த தொடர் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.ஆனால் காப்ளர் முந்தைய ஆண்டுகளை விட இப்போது ஈராக்கின் பாதுகாப்புப் படைகள் நல்ல பலம் பெற்றிருப்பதால் இனி உள்நாட்டு கலவரம் வெடிக்காது என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் முபாரக் மீதான விசாரணை தொடக்கம்.
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீதான கொலை வழக்கு விசாரணை மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.83 வயதாகும் ஹோஸ்னி முபாரக் இப்போது கெய்ரோவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் எகிப்தில் நடந்த வன்முறையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தில் 850 பேர் உயிரிழந்தனர். இது தவிர இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் இவரது இரு மகன்கள் ஆலா மற்றும் கமாலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர எகிப்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல்-ஆத்லி மற்றும் 6 இராணுவ உயரதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது இதை விசாரிக்கும் நீதிபதி அகமது ரபாத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை நீதிமன்றம் கடந்த 7ம் திகதி நிராகரித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி நடைபெற்ற விசாரணையை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இதையடுத்து நீதிமன்றத்தில் உள்ள தொலைக்காட்சி கமெராக்களை அகற்றுமாறு நீதிபதி ரபாத் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து உயர் பதவியில் உள்ளவர்கள் அளிக்கும் சாட்சியத்தை உரிய ஒப்புதல் பெற்ற பிறகே ஒளிபரப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இவ்விதம் சாட்சியமளித்தவர்களில் அப்போதைய இராணுவ தலைவர் பீல்டு மார்ஷல் ஹுசேன் தந்தாவியும் அடங்கும்.
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி முபாரக் உத்தரவிடவில்லை என்று சாட்சியமளித்தபிறகு தந்தாவி செய்தியாளர்களிடம் கூறினார். பொதுமக்களுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தார் என்ற காரணத்துக்காகவே முபாரக்குக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சீனாவுடன் ஆப்கானிஸ்தான் புதிய எண்ணெய் ஒப்பந்தம்.
சீனாவுடன் புதிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றை ஆப்கானிஸ்தான் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.சீனாவுடன் ஆப்கானிஸ்தான் ஏற்படுத்திக் கொண்டுள்ள முதல் எண்ணெய் ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி 3 புதிய எண்ணெய் கிணறுகளை மேம்படுத்த சீனா தேசிய பெட்ரோலிய கழகம் முடிவு செய்துள்ளது.இதில் 87 மில்லியன் பேரல் எண்ணெய்கள் சேமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிலானிக்கு பதிலாக பிரதமராகிறார் பாகிஸ்தான் அமைச்சர்.
எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் நீங்கள் தான் என் மகனுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸர்தாரி துபாயில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான அய்ட்ஜாஜ் அசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார்.அப்போதுதான் அவரிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிந்து மாகாணத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ நினைவிடம் அமைந்துள்ள கர்ஹி குதா பக்ஷ் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் இறுதியுரை ஆற்றும்படி அசனைக் கேட்டுக் கொண்டார் ஸர்தாரி.
இது பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கிலானியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அசனை பிரதமராக நியமிக்க ஸர்தாரி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.ஆனால் அதை மறுத்த அசன், ஒருவர் பிரதமர் ஆவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். எனினும் இடைத் தேர்தல் மூலம் நான் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களை கவர்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா, ஹிலாரி முதலிடம்.
2011ம் ஆண்டில் அமெரிக்கர்களை கவர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.உலகில் பல நாடுகளில் வாழும் அமெரிக்கர்களிடம் இந்த வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஆண்களில் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பெண்களில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இவர்களின் செயல்பாடு மற்றும் திறமைகளை கண்டு தாங்கள் வியந்து பாராட்டுவதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். ஒபாமா தொடர்ந்து 4 ஆண்டுகளாகவும், ஹிலாரி 10 ஆண்டுகளாகவும் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர முதல் 10 இடங்களை பிடித்த ஆண்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.அவர்களில் ஒபாமா தவிர கிளிண்டன், புஷ் மற்றும் நெவ்ட் ஜிஸ்கிரிஞ்ச், போப் ஆண்டவர் பெனடிக்ட், பில்கேட்ஸ், டொனால்டு டிரம்ப் ஆகியோரும் அடங்குவர். பெண்களில் மிச்செலி ஒபாமா, சாரா பாலின், காண்டலி சாரைஸ் ஆகியவர்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.
250 கொடிய விஷப்பாம்புகளுடன் பயணம் செய்த நபர் கைது.
செக்குடியரசு நாட்டை சேர்ந்தவர் காரெல் அபெலோவஸ்கி(51). இவர் ஸ்பெயின் நாட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரை அதே விமானத்தில் எடுத்து வந்தார்.அந்த விமானம் வழியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நின்றது. அப்போது அவர் கொண்டு வந்த பிளாஸ்டிக் கன்டெய்னரை சோதனையிட முடிவு செய்தனர்.
இதற்கு காரெல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பிளாஸ்டிக் கன்டெய்னருக்குள் 250 கொடிய விஷப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை தவிர அரியவகை பல்லிகள், சிலந்திகள் மற்றும் நத்தைகளும் இருந்தன.
அவற்றில் பல்லிகள் மெக்சிகோவில் இருந்தும், பாம்புகள் உட்பட மற்றவை தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வடக்கு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்பட்டவை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு(இந்திய ரூபாய்) பிணை வழங்கப்பட்டது. மேலும் அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.கொடிய விஷப்பாம்புகள் போன்றவற்றை பயணிகள் விமானத்தில் எடுத்துவர அனுமதி இல்லை. அவை பயணிகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ரயில் விபத்து: 40 பேர் மீது குற்றச்சாட்டு.
சீனாவின் தென் பகுதியில் உள்ள வென்ஸு நகரில் கடந்த ஜூலை மாதம் புல்லட் ரயில் விபத்துக்கு உள்ளானது. இதில் 54 பேர் பலியாயினர், 177 பேர் படுகாயம் அடைந்தனர்.இதனால் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். போக்குவரத்து பாதுகாப்பாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தீவிர விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ரயில் விபத்து குறித்து நிபுணர்கள் குழு விசாரணை நடத்தியது.விசாரணை அறிக்கை நவம்பர் மாதம் 20ம் திகதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அறிக்கை தாமதமானதால் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் ரயில் விபத்துக்கு முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஜிஜூன் உட்பட 40 பேர் பொறுப்பு என்று அரசு அறிவித்தது. இதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.ஆனால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அரசு தகவல் தெரிவிக்கவில்லை. ரயில் விபத்துக்கு அலட்சியம், விதிகளை மீறி அதிவேகமாக இயக்கியது உட்பட பல காரணங்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு நடவடிக்கைகள் சரியில்லை என்றும் 40 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புல்லட் ரயில் நிறுவன மேலாளரிடம் விபத்து குறித்து அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியில் அவர் பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நோக்கர்கள் சிரியாவில் தங்கி ஆராய வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை.
சிரியாவில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டறிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு குழுவொன்றை சிரியாவுக்கு அனுப்பியது.ஆனால் அவர்கள் உடனே திரும்பி விட்டனர். அவர்கள் ஹோம்ஸ் நகரத்தில் அதிக நாள் தங்கவேண்டுமென்று பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த ஹோம்ஸ் நகரத்தில் அவர்கள் அதிக நாள் தங்கி அங்கு நடப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அந்த குழுவைக் கேட்டுக் கொண்டது.பிரான்சின் வெளிவிவகாரத் துறையின் செய்தித்தொடர்பாளர் பெர்னார்டு வலேரோ கூறுகையில், இந்தக் குறுகிய காலப் பயணத்தால் நிலைமையை முழுதாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் அங்கு சென்று தங்கியிருந்து, நகர் முழுக்க சுதந்திரமாக நடமாட வேண்டும். மக்களிடம் நேரடியாக நிலைமை குறித்து கேட்டறிய வேண்டும். அப்போதுதான் உண்மை நிலையை அறிய முடியும் என்றார்.
இவர்கள் புதன் மற்றும் வியாழக்கிழமையில் தலைநகரான டமாஸ்கசைச் சுற்றியுள்ள ஹமா, இத்தலிப்பின் வடபகுதிகளுக்கும், தாராவின் தென்பகுதிகளுக்கும் செல்வதாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் அந்த இடங்களுக்குச் செல்லவில்லை.புதன்கிழமையன்று சிரியா 755 சிறைக்கைதிகளை விடுவித்தது. இவர்கள் அனைவரும் அமைதியானமுறையில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆவர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, December 28, 2011

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்!


ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.


ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் "C:WINDOWSsystem32config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.


இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.
download_buttonophcrack XP LiveCD logo-cd
ophcrack-xp-livecd-2.3.1.iso

download_buttonophcrack Vista LiveCD logo-cd
ophcrack-vista-livecd-2.3.1.iso

1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.
4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF