Thursday, December 22, 2011
சாதனை புரிந்த விண்டோஸ் 7!
மிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில் 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.
இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன.பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த இயங்குதளத்திற்கு மாறியுள்ளனர்.
விண்டோஸ் 7 சிஸ்டம் கடந்த அக்டோபர் மாதம் 22ம் திகதி வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது.மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலும் ஏழு விண்டோஸ் 7 இயங்குதளம் விற்பனையானது. இன்னும் இது தொடர்கிறது. நிச்சயம் இதுவரை எந்த இயங்குதளமும் எட்டாத இலக்கினை இது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF