Monday, December 26, 2011

இடதுபுறமாக தூங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி!


படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தூங்கும் பழக்கவழக்கத்தால் வாழ்வில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இங்கிலாந்தில் முன்னணி ஓட்டல் குழுமம் ஒன்று 3,000 பேரிடம் ஆய்வு நடத்தியது.அதன் முடிவில் கூறப்பட்டதாவது: இரவு தூங்கும் போது, படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதாக தெரிவித்தனர்.


வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளோம் என்றனர். வலது புறம் திரும்பி படுத்திருக்கும் கணவர் அல்லது மனைவி சந்திக்கும் நெருக்கடியைவிட, தாங்கள் அமைதியான நிலையில் இருப்பதாக 3ல் 2 பங்கு பேர் தெரிவித்தனர்.அதே வேளையில் வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர்.வலப்பக்கம் தூங்கும் 18 சதவீதத்தினருடன் ஒப்பிடுகையில் வேலை களை விரும்பி செய்வதாக 31 சதவீதம் பேரும், வேலையை வெறுப்பதாக 10ல் ஒருவரும் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF