இயற்கையின் பாதுகாவலர்களாக அறியப்பட்டவைகள் தான் டொல்பின்கள். Faroe தீவுகளில் உள்ள கடலில் டொல்பின்கள் வேட்டையாடப்படுவதால் கடல் முழுவதும் இரத்தமாக மாறியுள்ளது.நீலக்கடல் சிவப்புக் கடலாக காட்சியளிக்கிறது. வளர்ச்சியடைந்து வரும் மனித நாகரிகத்தின் மோசமான பக்கமாக இது பார்க்கப்படுகின்றது. ஏராளமான படகுகள் சுற்றிவளைத்து டொல்பின்கள் வேட்டையாடப்படுகின்றன.இது ஒரு வர்த்தக ரீதியான வேட்டையாடும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.இந்த முட்டாள் தனமான கொலைகளைத் தடுக்க சர்வதேச ரீதியில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.