Friday, December 2, 2011

ஐ போன்கள் ஆபத்தானவையா?: திணறும் அப்பிள்!!


தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.எனினும் இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்துத் தெரிய வருவதாவது,ரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார்.
சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளதுஇதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது.இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது.எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.மேலும் இச் சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம் அப்பிள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதனை!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF