Friday, December 23, 2011

அண்டார்டிகாவில் டைனோசர் வாழ்ந்ததாக ஆய்வில் தகவல்!


அண்டார்டிகா கண்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அர்ஜென்டினாவின் புதை படிவ ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள ஜேம்ஸ்ரோஸ் தீவில் டைனோசரின் வால் எலும்பு பாகங்களை கண்டெடுத்தனர்.அவை தாவரம் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ராட்சத டைனோசர் இனம் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அவை 4 கால்களினால் ஆனது. நீண்ட கழுத்து மற்றும் வால் பகுதியை கொண்டது.இவை 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. பொதுவாக டைனோசரின் எலும்புகள் உலகின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஆனால் தற்போது தான் அவை அண்டார்டிகாவில் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவை அண்டார்டிகா பனி கண்டத்திலும் வாழ்ந்து இருக்கும் என்று விபரம் தெரியவந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF