வட அமெரிக்கா கண்டத்தில் 6 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய டையனோசரசின் எலும்புக்கூடு படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவை “அலமோசரஸ் சஞ்சுவான் சிங்” டையனோசரஸ் குடும்பத்தை சேர்ந்தது. இந்த வகை டையனோசரஸ் ஒட்டகச்சிவிங்கியை விட மிக நீளமான கழுத்தை கொண்டவை.
இவைகள் தாவரங்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவை எனக் கருதப்படுகிறது. அவற்றின் எலும்பு படிவங்கள் உத்தா, நியூ மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் ஆகிய இடங்களில் 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை கண்டெடுக்கப்பட்டது.அமெரிக்காவின் மோண்டானா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டென்வர் டபுள்யூ போவியர், பென்சில் வேனியாவின் ஹரிஸ் பர்க்கை சேர்ந்த ராபர்ட் எம். சுல்லிவான் ஆகியோர் இதுகுறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன் எலும்பு படிவங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.