Sunday, December 11, 2011

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த அன்லிகர் என்ற தொழிலதிபர், தனது மெர்சிடெஸ் காரை மிகவும் ஆடம்பரமாக மாற்றம் செய்துள்ளார்.மொத்தம் 35 ஊழியர்கள் மூலம் 13 மாதங்கள் இரவும் பகலும் வேலை செய்து தங்கம், விலை உயர்ந்த சிவப்பு கற்களால் தனது காரை உருமாற்றி உள்ளார்.


5 கிலோ தங்க தூளுடன் சிவப்பு நிற பெயின்ட் கலந்து 24 கோட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. கார் சக்கரங்கள், முகப்பு விளக்கு, கதவு கைப்பிடி, ரேடியேட்டர்கள் மற்றும் காரின் உள்பகுதி முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது.ஸ்டியரிங், கியர், போல்ட்கள் உள்ளிட்டவற்றில் 600 சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கார் இஞ்சினையும் மேம்படுத்தி வேகத்தையும் அதிகரித்து உள்ளார்.இந்த காரில் ஜிபிஎஸ் உள்பட நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மொபைல் மூலம் காரின் செயல்பாட்டை முடக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதற்காக இந்திய ரூ.25 கோடி செலவு செய்துள்ள தொழிலதிபர் அன்லிகர், காரை விற்கவும் முடிவு செய்துள்ளார். இந்திய ரூ.56 கோடி குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்துள்ளார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF