
அறிவியல் வளர்ச்சியால இன்னைக்கு புதுசு புதுசா எவ்வளவோ நிறங்கள் உருவாகி இருக்கு. அப்படின்னா, எல்லா நிறங்களையும் கண்களால உணர்ந்து கொள்ள முடியுமான்னு உங்க மனசுக்குள்ள ஒரு கேள்வி எழலாம். இந்த உலகத்துல எத்தனை விதமான நிறங்கள் இருக்கோ, அத்தனை நிறங்களும் நம்ம கண்களுக்குத் தெரியும்.
நாமபார்க்குறபொருள்என்னநிறத்துலஇருக்குன்னுகண்கள்லஉள்ளஉணர்வுசெல்கள்தூண்டப்பட்டு மூளைக்குத் தெரிவிக்க, மூளை தான் நிறங்களைக் கண்டுபிடிச்சு நமக்கு சொல்லுது. கண்ணோட பார்வைப் படலத்துல கூம்பு மற்றும் குச்சி வடிவம் என ரெண்டு வகையான ஒளிஉணர்வுச் செல்கள் இருக்குது. இந்தச் செல்கள், நரம்பு இழைகளோட தொடர்பு கொண்டிருக்கும். இந்த நரம்பிழைகள் இணைந்து பார்வை நரம்பாக மாறி, மூளையின் பார்வைக்கட்டுப்பாட்டு மையத்துக்குச் செல்லுது.குச்சி செல்கள், மங்கிய வெளிச்சத்துல துல்லியமான பார்வைக்கு உதவுது. கூம்பு வடிவச் செல்கள், பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கவும், நிறப்பார்வைக்கும் பயன்படுது. நிறப்பார்வைக்கு, சிவப்பு, பச்சை, நீலம் என 3 அடிப்படை நிறங்களை தனித்தனியே உணரவல்ல கூம்புச் செல்கள் உதவி செய்யுது. இந்த நிறங்களோட விகிதாச்சார கலவையால தான் மற்ற வண்ணங்களை உணர முடியுது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF