
ஜப்பானில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்நாட்டு நிறுவனங்கள் மிக அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கழிப்பறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.அந்த வகையில் தற்போது அங்கு 72 ஆயிரம் பளிங்கு கற்களால் ஆன கழிப்பறையை தயாரித்துள்ளனர். அவை ஒன்றின் விலை ரூ.130 லட்சம்(இலங்கை ரூபாய். இந்த கழிப்பறையை ஜப்பான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆஸ்திரியாவின் நகை நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
தற்போது இது பொதுமக்கள் பார்வைக்காக ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கும் பொதுமக்கள் வியந்து பார்வையிடும் இக்கழிப்பறை விரைவில் விற்பனைக்கு வருகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF