Friday, December 2, 2011

ஆண்களை மிஞ்சிய பெண்!


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை விட அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் அதிக சம்பளம் பெறவுள்ளார்.அவுஸ்திரேலிய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த அந்நாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அந்நாட்டின் பிரதமரான ஜூலியா கில்லார்டின் சம்பளம் 90 ஆயிரம் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்படவுள்ளது.


இதன்படி ஜூலியாவின் மொத்த சம்பளம் 4 இலட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக உயரவுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பெறும் சம்பளத்தை விட அதிகமாகும்.ஒபாமா 4 இலட்சம் அமெரிக்க டொலர்களும், கமரூன் 2 லட்சத்து 21 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF