Sunday, December 11, 2011

தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட்!



ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து கைபேசிகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.ஆப்பிள் ஓன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும் Android Market என்ற தளத்தை உருவாக்கி Android கைபேசிகள் மற்றும் Tablet கணணிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது.


இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் அனைத்து மென்பொருட்களும் தரவிறக்கி கொள்ளலாம்.இப்பொழுது அந்த தளத்தின் தரவிறக்கம் செய்யப்பட மென்பொருட்களை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கூகுள் நிறுவனம் அதன் வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் மென்பொருட்கள் தரவிறக்கம் என்ற வளர்ச்சி விகிதத்தில் சென்று தற்பொழுது தரவிறக்க எண்ணிக்கை 10 பில்லியன்(ஆயிரம் கோடி) எண்ணிக்கையை தொட்டு உள்ளது.


இந்த சந்தோசமான தருணத்தை கொண்டாட கூகுள் தளம் ஒரு புதிய சலுகையை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் 10 மென்பொருட்களை சலுகை விலையாக வெறும் 10 சென்ட் விலையில் ஒவ்வொரு மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை பத்து நாட்கள் நடைமுறையில் இருக்கும்.Android மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய நினைப்பவர்கள் இந்த சலுகை நாட்களில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து உங்கள் கைபேசிகளில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Android

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF