Saturday, December 3, 2011

செயற்கையான எலும்பினை உருவாக்கி வைத்தியர்கள் சாதனை!


எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.இந்த மூலப்பொருளினை சேதமடைந்த இயற்கையான எலும்புடன் இணைக்கமுடியும் என்றும் இதன்மூலம் புதிய கலங்களை அப்பகுதியில் உருவாக்க இது உதவுகின்றதெனவும் கூறப்படுகின்றது.


இந்த ஆய்வானது வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எலும்பு போன்ற செரமிக் தூளினை ஒரு ஊட்டமாகக் கொண்டு அதனை உங்களது விருப்பத்திற்குத் தேவையான வடிவில் கணணியில் வரைந்துகொள்ளலாம்.இதனை எமக்குத் தேவையான பகுதியில் வைத்தால் அதன்மேலாக எலும்புத் திசுக்கள் வளரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இதுபற்றி இவர்கள் 4 வருடங்களாக ஆய்வுசெய்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த உருவங்களை உருவாக்க அவர்கள் ஓர் அச்சியந்திரத்தினை வடிவமைத்தனர். இதன்மூலம் முப்பரிமாண உலோகப் பொருட்களை உருவாக்கவே ஆரம்பத்தில் இது வடிவமைக்கப்பட்டது.
பிளாஸ்ரிக் ஒற்றையொன்றில் துகள்களைப் படிப்படியாக உருவாக்கி அது காயும் நிலைக்கு வந்ததும் சுத்தப்படுத்திப் பின்னர் 1250 செல்சியசில் (2282F) வாட்டியெடுத்தனர்.இதனை முயல்கள் மற்றும் எலிகளைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்து பார்த்ததாகக் வைத்தியர்கள் கூறுகின்றனர். இது எந்தவிதமான நலக்கேட்டினையும் விளைவிக்காதென்றும் அமெரிக்கக் குழு நம்புகின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF