Thursday, December 22, 2011

விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை!


வரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம். இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.


இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF