Sunday, December 25, 2011

வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் வரை ஒளிப்படம் எடுக்ககூடிய கமெராவை கண்டுபிடித்து விஞ்ஞானி சாதனை!


Ultra Slow motion கமெராக்கள் தான் கிரிக்கட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.


இந்த புதிய கமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த கமெராவை MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டுபிடித்துள்ளார்.சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF