இதன் நீளம் 100 மீற்றர்களாக உள்ளது. இதில் ஒரு வாகனம் நிறுத்துமிடம் ஒன்றும் உள்ளது.
அதுபோலவே சிறந்த தளபாடங்களும் ஒரு நீச்சல் தடாகமும் கோல்ப் (golf) விளையாட்டிற்கான பச்சைப் புல்வெளி ஒன்றும் காணப்படுகின்றது.இத்துடன் கண்ணாடியாலான உலங்குவானூர்தி இறங்குதள வடிவம் ஒன்று, ஒரு திரையரங்கு, 10 பேருக்கான விருந்தாளி உடைகள், ஓர் இரவு அரங்குப் பகுதி என்பனவற்றையும் இங்கு காணலாம்.இவற்றை எல்லாம் விட பாரிய காற்றுச்சுழலி ஒன்றும் இந்தப் படகில் காணப்படுகின்றது. இதுதான் இப்படகிற்கு மின் வழங்கும் தொகுதியாகும்.சுற்றுலாப் பயணப்படகில் இது ஒரு சிறப்பான வெளியீடு என இதனைத் தயாரித்த நிறுவனத்தினர் மட்டுமல்லாது பார்வையாளர்களும் தெரிவிக்கின்றனர்.




