Thursday, December 22, 2011

எத்தனை வகை தொடு திரைகள்?


மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடுதிரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கி, கட்டாய அம்சமாக மாறி வருகிறது. இது பற்றி மேலும் அறியச் செல்கையில் இருவகை தொடுதிரைகள் இருப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின்றன. 


அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை குறித்து இங்கு காணலாம்.தொடுதிரைகள் மொபைல் போனில் மட்டுமின்றி, டேப்ளட் பிசி, லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் மானிட்டர் களிலும் தற்போது கிடைக்கின்றன. ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், திரையின் மேல் புறமாக எந்த ஒரு தொடுதலையும் சந்தித்து எதிர்கொண்டு செயல்படும் பொருள் பூசப்படுகிறது. கீழாக கடத்தும் தகடு ஒன்று அமைக்கப்படுகிறது. இரண்டிற்கும் இடையே மிகச் சிறிய அளவிலான காற்று இடைவெளி தரப்படுகிறது. இதனால், இத்திரையைத் தொடுகையில் அந்த உணர்வானது நெட்டு மற்றும் படுக்கை வச அழுத்ததின் அளவில் உணரப்பட்டு அதற்கான சர்க்யூட் இணைக்கப்பட்டு சிக்னல் உள்ளே அனுப்பப்படுகிறது. தொடு உணர்ச்சியில் இது செயல்படுவதால், இதனை இயக்க தனியான ஒரு ஸ்டைலஸ் எனப்படும் பேனா தேவை இல்லை. ஆனால், தேவையற்ற தொடுதலையும் இது எடுத்துக் கொண்டு செயல்படுவதால், நாம் எதிர் பார்க்காத அழைப்புகளை இது ஏற்படுத்த லாம். கம்ப்யூட்டர்களில், தேவைப்படாத செயல்பாடுகளை இயக்கலாம். 


கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், பாதுகாப்பான, காப்பிடப் பட்ட வகையிலான பூச்சின் உள்ளாக ஊடுகடத்தும் பொருள் வைக்கப் படுகிறது. பொதுவாக ஊடுகடத்தும் பொருளாக இண்டியம் டின் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. காப்பிடப்பட்ட பூச்சாக கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. ஊடு கடத்தும் பொருள், மேலாக உள்ள கண்ணாடித் திரையுடன் தொடர்புகொள்கையில், அதன் எலக்ட்ரிக்பீல்டு தன்மைமாறுகிறது. தொடர்புஏற்படுத்தும் தொடும் இடத்தின் நான்கு முனைகளுக் கேற்றபடி சிக்னல்கள் செலுத்தப் படுகின்றன. இதில் என்ன சிக்கல் எனில், கை விரல்களில் உறை அணிந்து கொண்டோ, அல்லது வேறு பொருள் கொண்டு மூடியோ இதனை இயக்கினால், செயல்பாடுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். 


இந்த தொழில் நுட்பங்கள் கொண்ட இருவகை திரைகளும் தற்போது புழக்கத்தில் செம்மையாகவே இயங்கி வருகின்றன. இருப்பினும், நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் எந்த வகை உள்ளது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF