Saturday, November 6, 2010

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை பாரிய சீற்றம் - பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்வு!



நேற்றிரவு பாரிய சத்தத்துடன் வெடித்த இந்தோனேசியாவின் மெராபி எரிமலை தாக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடித்தது போல, பயங்கர கர்ஜனையுடன் எரிமலை வெடித்துள்ளது. வெளிவந்த நச்சுப்புகையின் தாக்கம் சூழவுள்ள கிராமங்கள், வனப்பகுதிகளில் பரவியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தோல் கருகியும், எரிந்தும் காணப்படுகிறது.

750C பாகை செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப்பெரும் எரிமலை வெடிப்பாக மெராபி வெடிப்பு இடம்பிடித்திருக்கிறது. மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் எரிமலை வெடித்துள்ளதால் மக்கள் விழிப்பு நிலையில் இருக்க தவறியுள்ளனர்.

எரிமலையை சூழவுள்ள 12 மைல்கள் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியகற்றப்படுகின்றனர்.
மருத்துவமனையிலும் தீக்காயங்களுடன் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ள நிலையில் மெராபி எரிமலை வெடிப்புச்சம்பவம் இந்தோனேசிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF