Thursday, November 4, 2010

அமெரிக்க இடைத்தேர்தல் - ஒபாமாவின் ஆளும் கட்சிக்கு பாரிய பின்னடைவு?



அமெரிக்காவில் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், குடியரசு கட்சி அதிக இடங்களை  கைப்பற்றியிருப்பதுடன், ஒபாமா தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவாய்க்கிழமை, அமெரிக்காவின், 37 மாகாண கவர்னர், நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 437 மேல் சபை  உறுப்பினர்கள் மற்றும் 37 செனட் உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்தது.

நேற்று காலை முதல் இத்தேர்தலின் முடிவுகள் வெளிவரத்தொடங்கின. இதில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி  பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருப்பதுடன், செனட் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மையையும் கைப்பற்றியுள்ளது.

இக்கட்சியை சேர்ந்த ஜான் போயனர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனால் குடியரசு கட்சியின் ஆதரவின்றி எந்த ஒரு சட்டத்தையும் செனட் சபையில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிதி நெருக்கடியால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சமயம், பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள்  வேலையிழந்தனர். இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என  எதிர்பார்க்கப்பட்ட போதும் நினைத்தளவுக்கு, அவரால் சாதிக்க முடியாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.

மேலும் வேலைவாய்ப்பு வழங்கலிலும்  பெரிய அளவில் மாற்றம் வரவில்லை. இந்த அதிருப்தி காரணமாகவே, தங்களது ஹீரோ என  கருதிய ஒபாமாவையும் உதறித்தள்ள மக்கள் முடிவெடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF