சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் என்ற 5 விண்கலங்கள் அமெரிக்க விண்வெளி மையம் நாசா பயன்படுத்தி வந்தது.
இதில் சேலஞ்சர் கடந்த 1986ம் ஆண்டும், கொலம்பியா கடந்த 2003ம் ஆண்டும் வெடித்து சிதறியது. மீதமுள்ள 3 விண்கலங்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருந்த அனைத்து விண்கலங்களும் அடுத்த ஆண்டுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி விண்கலம், தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இதற்காக இந்த விண்கலம் நேற்று புளோரிடாவில் உள்ள கேப்கேனவரால் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடைசி பயணத்துக்காக டிஸ்கவரி விண்கலம், எடுத்துச் செல்லப்படுவதை, நாசா ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நேற்று ஒருவித சோகத்துடன் பார்வையிட்டனர். எண்டவர் விண்கலம் தனது கடைசி பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

விண்கலங்களின் பயன்பாடு ஒவ்வொன்றாக முடிவுக்கு வருவதால், நாசாவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களும் அடுத்த மாதம் 1ம் தேதியுடன் வேலையிழக்கின்றனர்.