Monday, November 1, 2010

இந்தோனேசியாவில் இன்று மற்றுமொரு எரிமலை வெடிப்பு


இந்தோனேசியாவில் மற்றுமொரு பயங்கர சக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
எரிமலை வெடிப்பினால், ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகைமூட்டம் காணப்படுகின்றது. பாரிய சத்தத்துடனான இந்த எரிமலை வெடிப்பு பற்றிய புதிய அறிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் மவுண்ட் மெராபி என்னுமிடத்தில் கிட்டத்தட்ட 20 எரிமலைகள், சாம்பலைக் கக்கிய வண்ணம் காணப்படுகின்றன எனவும் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு சாம்பல் புகை வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடபகுதி சார்ந்த மலைச்சரிவில் ஏற்கனவே 38 பேர் வரை உயிரிழந்துள்ளதாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
மென்டாவி தீவின் மேற்குப் பகுதிகளில் படகுகளும், ஹெலிகொப்டர்களும் மக்களை மீட்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.
வெடிப்பையடுத்து ஏற்பட்ட சுனாமி தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டிருந்தன.
மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து, இராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் படுகாயமடைந்தோர் அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், வைத்தியர்கள், படையினர் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி எட்வேர்ட் தெரிவித்தார்.
10FKC04362.jpg image by nishanthi_04
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF