சீனாவில் பாண்டா கரடி சாணத்தில் விளையும் டீ தூள் 500 கிராம் விலை ரூ.18.5 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிகபட்ச விலை கொண்டதாக இந்த டீத்தூள் விளங்கும்.சீனாவின் சிசுவான் மாகாணத்தை சேர்ந்த தொழில் முனைவோர் அன் யான்ஷி (41). முன்னாள் ஆசிரியரான அன், ஒரு கருத்தரங்கில் பங்கேற்றார். அதில், கரடி சாணத்தின் மகத்துவம் குறித்து பேசப்பட்டது.இதையடுத்து தனது தேயிலை தோட்டத்திற்கு ரசாயன உரத்திற்கு பதில் பாண்டா கரடியின் சாணத்தை உரமாக இட்டார். அதற்காக கரடி பண்ணையில் இருந்து 11 டன் சாணத்தை வாங்கினார்.
மண்ணின் வளம் பேணும் சத்து மிக்க கரடி சாணம் மூலம் விளைவிக்கப்பட்ட டீத்தூள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். இந்த டீயை குடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக உடல் எடை குறைப்புக்கும், கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கும். இதுபோன்ற காரணங்களால், அரை கிலோ பாண்டா டீ ரூ.18.5 லட்சத்துக்கு மேல் விற்கப்படும்.பாண்டா டீக்கு அதிக போட்டி ஏற்படும் என்பதால் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளதாக அன் தெரிவித்தார். பாண்டா டீ குறித்த கருத்தை சிலர் ஏளனம் செய்ததுடன், அரை கிலோ டீ தூள் ரூ.1.6 லட்சத்துக்கு வேண்டுமெனில் விற்கப்படலாம் என்று தெரிவித்தனர்.ஆனால் இதை சவாலாக ஏற்று கரடி சாணத்தில் தேயிலை விளைச்சலை மேம்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட்டதாக அன் யான்ஷி தெரிவித்தார்.