இலங்கைக்கு சமூகமளித்த 161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு இலங்கைகுடிவரவு, குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த குறித்த மத போதகர்கள் தப்லீக் ஜமா அத் எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களின் அலுவலகமொன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கை வந்துள்ள நிலையில் வேறு விடயங்களில் ஈடுபட முடியாது என கூறியுள்ள சூலாநந்த பெரேரா, இவர்கள் விசா சட்டங்களை மீறி செயற்படுவதாக கூறி நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் குறித்த அமைப்பினர் எவ்வித அரசியல் நோக்கங்களையும் கொண்டவர்கள் அல்ல என மேல்மாகாண ஆளுஞர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார். குறித்த மத போதகர்கள் அமைப்பினர், முன்னாள் அமைச்சர் ஏ.எஸ்.எம் பௌஸியை சந்தித்து தம்மை இலங்கையிலிருந்து வெளியேற கூறும் உத்தரவை விலக்கிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.