கடந்த வருடம் எனது வேலையை ராஜினாமா செய்தேன். பயணத்திற்கு தயாரேனேன். கையில் கமெராவுடன், வன் வே டிக்கெட் எடுத்து லண்டனுக்கு புறப்பட்டேன். அன்றிலிருந்து தொடங்கியது இப்பயணம் என்கிறார் கியெண்ட் லாம். இதோ அவர் தொகுத்துள்ள டைம்ஸ் லேப் முறையிலான வீடியோ. இதன் பெயரே 'Time is Nothing'.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, January 7, 2012
'நேரம் என்பது ஒன்றுமில்லை' : 290 செக்கன்களில் உலகம்!
கியெண்ட் லாம் (Kiend Lam) எனும் புகைப்பட காரர் கடந்த 2011 ம் வருடம் தான் சுற்றுலாமேற்கொண்ட 17 நாடுகளில் எடுத்த வீடியோக்களை Time-Lapse முறையில் 290 செக்கன் கொண்ட (கிட்டத்தட்ட ஐந்து நிமிடம்) வீடியோ காட்சியாக தொகுத்து இணையத்தில் தரவேற்றம் செய்துள்ளார்.கிட்டத்தட்ட 25,000 மைல் சுற்றியடித்துள்ள இவர் 343 நாட்கள் வெளிநாடுகளிலெயே இருந்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெய்ன், மொரோகோ, எகிப்து, ஜோர்தான் என நீளும் இவர் பயணம் செய்த நாடுகளில் மொத்தம் 6,237 அழகிய புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.