Thursday, January 5, 2012

நோர்வேயில் கரையொதுங்கிய 20 தொன் மீன்கள்

நோர்வேயின் வடபகுதியில் உள்ள நொர்ட்றியஸா நகரில் கவேனெஸ் எனும் இடத்திலுள்ள கடற்கரையில் 20 தொன்னுக்கும் மேற்பட்ட நிறையுடைய இறந்த மீன்கள் திங்கட்கிழமை கரையொதுங்கியுள்ளன.இந்த மீன் கூட்டம் இறந்தமைக்கு அண்மையில் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற புயல் மற்றும் அனர்த்தம் தூய நீர் போதிய ஒட்சிசன் கிடைக்காத நிலைமை என்பன காரணமாக இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



மேலும் இது தொடர்பில் மேலதிக ஆராய்ச்சிகளையும் அந்நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள நகரமொன்றில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.இதே போல் கடந்த மாதம் அமெரிக்காவின் 'நிவ் இங்லேண்ட்' பகுதியில் 25 குதிரைகள் ஒரே இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF