பொதுவாக சுறாக்கள் இது போன்று கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாது. ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக தான் அவை புதிய இனத்தை உருவாக்கியுள்ளதாக குவின்ஸ் லேண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஜெஸ் மோர்கன் என்பவரும் ஒப்புக் கொண்டுள்ளார், இந்த சுறாக்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
Thursday, January 5, 2012
அவுஸ்திரேலியா கடலில் வாழும் கலப்பினச் சுறாக்கள்!
உலகின் முன்னணி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ் லேண்ட்டில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.2ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த ஆராய்ச்சி நடந்தது. அப்போது அங்கு 57 கலப்பின சுறா மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.அவை பொதுவான பிளாக்டிக் சுறாக்களும், ஆஸ்திரேலியா பிளாக்டிக் சுறாக்களும் கலந்து உருவான கலப்பினமாகும். இவை மற்ற சுறா மீன்களை விட வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன.கடல் நீரின் தன்மை மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கு தக்கப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள அவை தாங்களாகவே கலப்பின சுறாக்களை உருவாக்கி கொண்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF