Saturday, January 7, 2012

2012ல் அறிமுகவாகவிருக்கும் உலாவிகள்!


ஓராண்டுக்கு முன்னர் கைபேசிகளில் இயங்க டூயல் கோர் எனப்படும் அதிவேக உலாவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2011ஆம் ஆண்டில் அதுவே இன்றியமையாத ஒன்றாக இடம்பெற்றது.முதன் முதலில் ஜனவரியில் வெளியான எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் கைபேசியில் டூயல் கோர் உலாவி இடம் பெற்றது. அதன் பின்னர் உயர்வகை ஸ்மார்ட் போன்களில் கட்டாயமாக இடம் பெறும் ஒன்றாக இந்த உலாவி மாறியது.2012ல் என்ன வரலாம் என்று எதிர்பார்க்கையில், சிப்களை வடிவமைத்துத் தரும் நிறுவனங்கள் நான்கு கோர் உலாவிகள்(4 Core Processor) கிடைக்கும் என உறுதி அளித்துள்ளனர்.


இந்த நான்கு கோர் உலாவிகள்களின் திறன் எப்படி இருக்கும்?


என்விடியா(Nvidia) என்ற நிறுவனம் தான் முதன் முதலில் டூயல் கோர் உலாவிகளை எல்.ஜி. நிறுவன மொபைல் ஸ்மார்ட் போன்களுக்குத் தந்தது. அப்போதிருந்த Tegra 2 சிப்பில் இது இணைக்கப்பட்டது.என்விடியா நிறுவனம் இந்த உலாவி குறித்து கூறுகையில், இதன் மூலம் கைபேசி ஒன்றின் இயக்க திறன் பன்முகமாக அதிகமாகும் என்று அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை இயக்கும் திறன் கூடும்.கேம்ஸ் இயக்கத்தில் தேவைப்படும் multithreaded எனப்படும் செயல் திறன் இதில் கிடைக்கும். இதனால் எத்தகைய கேம்ஸ் ஆக இருந்தாலும், அதன் அனைத்து கிராபிக்ஸ் அமைப்புடன் இதில் இயக்கலாம்.


ஒரு டெஸ்க்டொப் அல்லது மடிக்கணணியின் திறன் அனைத்தும் இதில் பெறலாம். டெஸ்க்டொப் கணணி ஒன்றில் காணப்படும் உலாவியின் திறன் அனைத்தும் இதில் காணப்படும். அடோப் போட்டோ ஷாப் போன்ற இமேஜ் சாப்ட்வேர் தொகுப்புகளை இதில் எளிதாக இயக்கலாம்.வீடியோ இயக்கமும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். இந்த அளவிற்கு திறன் இருப்பதால், அப்ளிகேஷன்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த நான்கு கோர் உலாவி இயக்கத்திற்கு ஏற்ற முறையில் புரோகிராம்களைத் தயாரித்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF