எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் அதிகாலை 4.20 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
அதன்பின்னர் அதிகாலை 5.40 மணியளவில் மீண்டும் டுபாய் நகரை நோக்கி பயணித்துள்ளது.
சிறிகொத்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் துரோகச் செயலாகும்!- ரணில்.
எதிர்க்கட்சி ஆளும் கட்சி மீது தாக்குதல் நடத்தும் தருணத்தில், சிறிகொத்தா மீது தாக்குதல் நடத்துவது துரோகமாகும்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளனர்.ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு நபருக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான கிளர்ச்சிக் குழுவினர் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.இந்தக் கூட்டம் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது.கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்த போவதில்லை!- ஜனாதிபதி மகிந்த.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனவே சிங்கள, பௌத்த வாக்குகளை தன்னால் இழக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்துடன் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தாலும் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புலிகள் சார்பு முத்திரைகளை நீக்கிவிட்டு கடிதங்களை விநியோகிக்கப் போவதாக அறிவிப்பு.
சர்வதேச தபால்சேவை தொடர்பான விதிகளை ஒருங்கிணைக்கும் யூபியூ என்ற ஐநாவின் உலகளாவிய தபால் சங்கத்தின் சமவாயத்தின்படி, ஒரு நாட்டில் புழக்கத்திலுள்ள தபால் முத்திரைகளை அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச தபால் சேவையின் போது அங்கீகரிக்கின்றன.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் சார்பான தபால் முத்திரைகள் இலங்கைக்கு வந்துசேருமானால், சர்வதேச தபால் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்படப்போவதில்லை என்று இலங்கை தபால் சேவை அறிவித்துள்ளது.
இவ்வாறான தபால் முத்திரைகளுடன் வந்துசேரும் பொதிகள் எங்கிருந்து வருகின்றன, யாருக்கு சென்று சேருகின்றன என்பது போன்ற விபரங்களை பதிவு செய்துகொண்டு, அந்த முத்திரைகளை நீக்கிவிட்டு பொதிகளை சென்று சேர வேண்டிய நபருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக இலங்கைத் தபால் மாஅதிபர் எம்.கே.பி திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார்.
இறைமையுள்ள நாடு என்ற ரீதியில், எந்தவொரு சர்வதேச சட்ட ஒழுங்குவிதியையும் புறந்தள்ளிவிட்டு இறைமைக்கு ஏற்றவகையில் தான் செயற்பட வேண்டுமென்பது அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தபால் திணைக்களம் செயற்படுவதாகவும் தபால் மாஅதிபர் கூறினார்.
நாட்டின் இறைமைக்கு எதிரானது என்று தாம் கருதும் இவ்வாறான தனிப்பட்ட ரீதியிலான தபால் முத்திரைகள் வெளியிடப்படும் நாடுகளுக்கு இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்றும் இலங்கை தபால்மா அதிபர் திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த பதவி விலகுவார் என்று கூறிய இந்திய தொலைக்காட்சியை இலங்கையில் பார்வையிட தடை: ஆங்கில ஊடகம்.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு, 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர்.
குறிப்பாக இலங்கையைப் பற்றிக் கருத்து வெளியிட்ட ஒரு சோதிடர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டு இறுதிக்குள் தனது பதவியை விட்டு, அரசியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்தக் கருத்தை நிகழ்வில் பங்கேற்ற ஏனைய சோதிடர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி இலங்கையில் டயலொக் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகியிருந்தது.
இந்நிகழ்ச்சி பற்றி கேள்வியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுச பல்பிட்டவை அழைத்து, கண்டித்துள்ளதுடன் மீ்ண்டும் இந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பாவதை தடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இலங்கையில் அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் இணைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழைப்பு.
இதனையடுத்து களனி பிரதேசசபை, மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் அத்துடன் ஜனாதிபதிக்கும் இதுதொடர்பில் முறைப்பாட்டை செய்துள்ளது.இதனையடுத்தே மேர்வின் சில்வா ஒழுக்காற்று குழுவின் முன் ஆஜராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பணிப்புரை விடுத்துள்ளது.
இதேவேளை அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக களனி பிரதேசசபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மேல் மாகாணத்தின் பல பிரதேசசபைகளும் ஆதரவை வெளியிட்டுள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய கட்சி செயற்குழு உறுப்பினர்கள், இரண்டு தரப்பினரிடமும் ஒழுக்காற்று விசாரணை நடத்துவதென தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த ஊடகவியலாளர்கள் முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்.
சுதந்திர ஊடக அமைப்பின் செயற்பாட்டாளர்களான சுனந்த தேசப்பிரிய, உவிந்து குருகுலசூரிய உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறிய பலர் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சதி முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
மரண அச்சுறுத்தல் உள்ளதாக போலியாக தெரிவித்து நாட்டை விட்டு தப்பிச் சென்று இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.உவிந்து குருகுலசூரிய, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கைக்கு எதிராக இணையத் தளமொன்றை நடாத்தி வருவதாக குறித்த சிங்கள பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகளில் ஆபிரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள முடியாது!- அரசாங்கம்.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சுயநிர்ணய ஆட்சி வழங்கப்பட வேண்டுமெனவும் அதற்கு ஆபிரிக்க நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வணக்கத்திற்குரிய இமெனுவல்
அடிகளார் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை அமைப்பு கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அடிகளார் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை அமைப்பு கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஆசிய நாடுகளின் அமைதியை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: சீனா குற்றச்சாட்டு.
உலகில் அமைதி நிலவும் ஆசிய பசிபிக் கண்டங்களில் இராணுவப் பதட்டத்தை உருவாக்குவதற்காக அமெரிக்கா இராணுவ படைகளை குவிக்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சைனா டெய்லி நாளிதழில் கூறியிருப்பதாவது: இராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம் ஆசிய பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இராணுவத்தைக் குவிக்கிறார்.
அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் இராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். உலகின் பிற பகுதிகளை விட ஆசிய பசிபிக் மண்டலத்தில் அதிகளவிலான அமைதி நிலவுகிறது. அங்கு ஏன் அமெரிக்கா தனது படைகளைக் குவிக்க வேண்டும்? என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் சமாதான பேச்சு: பான் கி மூன் லெபனான் பயணம்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் இம்மாதம் லெபனான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இதன் முதல் கட்டமாக அவர் அடுத்த வாரம் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக லெபனான் செல்கிறார். அங்கு அவர் லெபனான் ஜனாதிபதி மிகால் கலைமான், பிரதமர் நஜீப் மிகாதி மற்றும் ஐ.நா.வின் அமைதிப்படை தளபதிகளை சந்தித்து பேசுகிறார்.இதனையடுத்து அம்மான் நகரில் அவர் இஸ்ரேல்- பாலஸ்தீனம் நாடுகளின் சமரச திட்டம் குறித்து பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துகிறார். இந்த தகவலை நிருபர்களிடம் பான் கி மூன் தெரிவித்தார்.
2012ம் ஆண்டின் டாப் 10 வார்த்தைகள்.
கேட், செர்ன், ஒலிம்பிக்ஸ் ஆகிய வார்த்தைகள் 2012ம் ஆண்டின் டாப் 10 வார்த்தைகளாக இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி இந்த ஆண்டில் முதல் இடத்தை பிடிக்கும் வார்த்தை கேட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃபேஷன், கொண்டாட்டம் போன்றவைகளில் முக்கிய இடம்பிடிப்பது கேட் வார்த்தையாகும்.
ரகசிய இடத்தில் மையம் அமைத்து யுரேனியம் தயாரிக்கிறது ஈரான்.
அணு சக்தி எரிபொருள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் செறிவூட்டிய யுரேனியம் தயாரிக்க புதிய மையத்தை தொடங்கியுள்ளது ஈரான்.யுரேனியத்தை செறிவூட்டும் புதிய மையம் தரைக்கடியில் யாருக்கும் தெரியாத இடத்தில் செயல்படுகிறது. எனவே வெளிநாடுகள் தாக்கக்ககூடும் என்கிற ஆபத்து வராது என கருதப்படுகிறது.
ஈரானின் புனித நகரான கோம் என்ற இடத்துக்கு அருகே இராணுவ வளாகம் அமைந்துள்ள பகுதியான போர்டோ என்ற இடத்தில் இந்த புதிய மையம் செயல்படுகிறது.ஈரான் அணு சக்தி துறையின் தலைவர் பெரைதூன் அபாசி, போர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் பணி விரைவில் தொடங்கும் என சனிக்கிழமை தெரிவித்தார்.ஈரானிடம் ஏற்கெனவே நடான்ஸ் என்ற இடத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளது. இது மிகப் பெரிய மையமாகும். ஆனால் போர்டோ பகுதியில் அமைந்துள்ள மையம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதோடு அல்லாமல் வெளிநாடுகள் எளிதாக தாக்கிவிடமுடியாத ஒரு இடமாகும்.
போர்டோ மையம் ரகசியமாக பல காலமாக இயங்கிவந்த நிலையில் 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேலைநாடுகள் இதுபற்றி தெரிந்து கொண்டு அம்பலப்படுத்தின. அதைத் தொடர்ந்தே ஈரான் இந்த மையம் செயல்படுவது பற்றி ஒப்புக்கொண்டது.அணு ஆயுதங்கள் தயாரிக்கவும், அணுசக்திக்கான எரிபொருளாகவும் பயன்படக்கூடியது செறிவூட்டிய யுரேனியம். எனவே மேலை நாடுகள் இதுபற்றி எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மருத்துவத் தேவைக்காகவும், அணு மின்சக்தி தயாரிக்கவுமே செறிவூட்டிய யுரேனியத்தை தயாரிப்பதாக ஈரான் கூறிவருகிறது.
ஏமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
ஏமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்குவது என அந்நாட்டு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏமன் ஜனாதிபதியாக கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அலி அப்துல்லா சலேவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
அமெரிக்கா உட்பட பல அரபு நாடுகள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை அமைப்பு இவரது ஆட்சி குறித்தும் அங்கு நடந்த கலவரத்தினால் அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்தும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் அலி அப்துல்லா சலே மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் உட்பட பல முறைப்பாடுகள் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலை நடத்த சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு பொதுமன்னிப்புவழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்நாட்டு அமைச்சரவையில் இதற்கென வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கொடுத்த நெருக்கடி காரணமாக ஏமனில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் இருந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது: முஷாரப்.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இஸ்ரேலின் முன்னணி நாளிதழான ஹாவூரெட்ஸ் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அபோதாபாத்தில் பின்லேடன் ஐந்தாண்டுகள் இருந்ததாகக் கூறுகின்றனர்.
அதாவது என் ஆட்சியில் இரு ஆண்டுகள் இருந்ததாகச் சொல்கின்றனர். ஆனால் அவர் அங்கு தான் இருந்தார் என்பது எனக்குத் தெரியாது என்பதை நான் 100 சதவீதம் உறுதியாகச் சொல்கிறேன்.இவ்விவகாரத்தில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்ததற்கு உடந்தையாக சிலர் இருந்தனர் என்பதா அல்லது கண்காணிப்பில் கோட்டை விட்டார்கள் என்பதா என கேட்டால் இரண்டாவைத் தான் நான் குறிப்பிடுவேன். அவ்வாறு கோட்டை விட்டது வெட்கக் கேடு தான்.
அவரது அண்டை வீட்டார் கூட அவர் யார் என தெரியாமல் தான் இருந்தனர். ஐ.எஸ்.ஐ.க்கு கூட அவர் தட்டுப்படாமல் இருந்ததற்கு அவர் தொலைபேசி எதுவும் பயன்படுத்தவில்லை என்பது தான் முக்கிய காரணம்.அபோதாபாத் பகுதி கோட்டை போன்ற காவற்பகுதி என மேற்குலகில் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது போல அபோதாபாத் ஒன்றும் பிராக் கோட்டை அல்ல. (பிராக் கோட்டை என்பது, அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ராணுவத் தளம்).
அது சுற்றுலாவுக்குரிய அமைதியான இடம். அங்கு ஓட்டல்கள், பள்ளிகள் மற்றும் கடைகள் தான் அதிகம். அதனால் அபோதாபாத் பற்றிய கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை.அதேபோல் பின்லேடன் வீட்டைச் சுற்றி மிகப் பெரிய சுவர்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர். மேற்கு நாடுகளில் அதுபோல கட்டுவது என்பது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானில் இது சகஜம் என தெரிவித்தார்.
தொலைபேசி குறித்து கிரகாம் பெல் எழுதிய கடிதம் ஏலம்.
தொலைபேசியின் பயன்பாடு குறித்த விளக்கப்படத்துடன் அலெக்சாண்டர் கிரகாம் பெல் எழுதிய அபூர்வ கடிதம் ஏலத்துக்கு வருகிறது.உலகில் இன்று தொலை தொடர்பு துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. இன்றைய நவீன தொலை தொடர்பு மற்றும் அதுசார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு முழு முதல் காரணகர்த்தாவாக விளங்கியவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்.
இவர் தனது உதவியாளர் தாமஸ் ஏ.வாட்சன் என்பவரின் உதவியுடன் முதல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அந்த காலத்தில் தொலைபேசியை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கி அதன் செயல்பாடுகள் குறித்த படம் வரைந்து, ஒரு கடிதத்தை அவரது பெற்றோருக்கு அனுப்பினார்.அவரின் கைப்பட எழுதிய 8 பக்கம் கொண்ட அந்த கடிதம் 1878ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி வாஷிங்டனில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த காலத்து தொலைபேசி வயர்களில் மின்னல் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அது பயன்படுத்துவோரை தாக்கலாம் என்றும் பெல் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டால் அச்சப்படத் தேவையில்லை என்று அதை எப்படி மேற்கொள்வது என்பதை ஆழமாகவும், மிக தெளிவாகவும் படம் வரைந்து குறிப்பிட்டிருந்தார் கிரகாம் பெல்.கிரகாம் பெல் எழுதிய மிகவும் அரிதான அந்த கடிதம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. அதை நியூ ஹம்ஷையரை சேர்ந்த ஆர்.ஆர். அமைப்பு ஏலம் விடுகிறது. கிரகாம் பெல்லின் கடிதத்தை வாங்க கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் இரு புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரு புத்த மதத் துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் பலியானார், மற்றொருவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து 11 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பலியாகினர், எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது தெரியவில்லை.
இந்த அனைத்து தீக்குளிப்புகளும், சீனாவின் மத்திய பகுதியில் திபெத்தை ஒட்டி அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் தான் நிகழ்ந்தன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அதே சிச்சுவான் மாகாணத்தில் அபா பகுதியில் நடுச் சாலையில் 22 வயதுடைய புத்த மதத் துறவி ஒருவர் தீக்குளித்தார். உடனடியாக காவல்துறையினர் விரைந்து அவரை சிகிச்சைக்குச் சேர்த்தனர்.அதே பகுதியில் ஓட்டல் ஒன்றில் 18 வயதுடைய மற்றொரு துறவியும் தீக்குளித்து மரணம் அடைந்தார். விசாரணையில் இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தீக்குளிப்பது என முடிவு செய்திருந்தது தெரியவந்ததாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் அருகில் உள்ள கீர்த்தி புத்த மடாலயத்தைச் சேர்ந்த முன்னாள் துறவிகள். சிச்சுவான் மாகாணத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இத்தீக்குளிப்பு படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. தலாய்லாமா தான் இதைத் தூண்டி விடுகிறார் என சீனா குற்றம்சாட்டி வருகிறது.ஆனால் புத்த மதத் துறவிகள் மத்தியில் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தலாய்லாமாவின் வருகையைக் கோரியும், இத்தகைய தீக்குளிப்புகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆனால் இத்தீக்குளிப்பு சம்பவங்களைத் திசை திருப்பும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பலியான இருவரும் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என ஷின்ஹூவா தெரிவித்துள்ளது.மேலும் திருட்டு, சூதாட்டம் போன்ற தங்களின் குற்றச் செயல்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்பிக்க இதுபோல தீக்குளிப்பில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், சீனா கருத்துக்களை பரப்பி வருகிறது.
புலம்பெயர்ந்தவர்களால் பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு.
பிரிட்டனில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் இளைஞர் கூட்டத்திற்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து பிரிட்டனில் விவாதம் தொடங்கியது.மைக்ரேஷன் வாட்ச் யு.கே என்ற அமைப்பு இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பை விளக்க ஒரு புள்ளிவிபரத்தை அளித்தது.கிழக்கு ஐரோப்பாவை அல்லது A8 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை 600,000 ஆகும். இங்கு பிரிட்டனில் வேலை இல்லாமல் திரிந்த இளைஞரின் எண்ணிக்கை 450,000 ஆகும்.
பிரிட்டனில் கடந்த 2004ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 575,000 பேருக்கு வேலையில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் கடந்த 2011ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,016,000 ஆகும் என்று தேசியப் புள்ளியியல் துறை தெரிவிக்கின்றது.எனவே இந்த அமைப்பு புலம்பெயர்வில் சில கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறது. இதன் தலைவரான ஸர். ஆண்டுரூ கிரீன் கூறுகையில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் இளைஞர்களின் பணித்திறனை பிரிட்டனில் உள்ள முதலாளிகள் பெரிதும் மதிக்கின்றனர்.
அவர்களும் இளைஞராக, நன்கு படித்தவராக, குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக, உழைப்பில் உண்மை உடையவராக இருக்கின்றனர் என்று புலம்பெயர்ந்து வரும் இளைஞர்களின் உழைப்புத் திறனைப் பாராட்டினார்.கடந்த 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த போலந்து, செக் குடியரசு, ஷங்கேரி, சுலோவேகியா, சுலோவேனியா, எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா நாடுகளின் இளைஞர்கள் சமீப காலமாக பிரிட்டனுக்குள் வந்து பிரிட்டிஷ் இளைஞர்கள் கடினம் என கருதும் பணிகளை அவர்கள் சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
இவ்வாறு 300,000 பேர் ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் பிரிட்டன் இளைஞர்கள் செய்ய மறுக்கின்ற அழுக்கான, கடினமான, ஆபத்தான சில வேலைகளைக் கூட விரைவாகவும், நிறைவாகவும் செய்கின்றனர்.மேலும் செய்யும் தொழில் குறித்து நேர்மையான அணுகுமுறையும் இவர்களிடம் காணப்படுகிறது என்று தேசிய புள்ளியியலின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பழங்கால நாணயம் முதன் முறையாக அமெரிக்காவில் ஏலம்.
அமெரிக்காவில் சுமார் 220 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட நாணயம் ரூ.7.30 கோடிக்கு ஏலம் போயுள்ளது.அமெரிக்க அரசு கடந்த 1793ம் ஆண்டு முதல் சொந்தமாக நாணயங்களை அச்சிட்டு வருகிறது. அப்போது அச்சிடப்பட்ட ஒரு சென்ட் நாணயம் ஒன்று புளோரிடா மாநிலம் ஆர்லண்டோ நகரில் உள்ள நிறுவனத்தில் தற்போது ஏலம் விடப்பட்டது. அது ரூ.7.30 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
இதுபற்றி ஏல நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பழங்கால நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தின கற்கள் உட்பட ஏராளமான பொருட்களை ஏலம் விடும் வகையில் சிறப்பு ஏல கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.சுமார் 220 ஆண்டு பழமையான நாணயம் ரூ.7.30 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா மற்றும் ஒரு சென்ட் என்றும் மறுபுறம் சுதந்திர தேவியின் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது. நாணயம் இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஆளில்லா விமானங்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை.
அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே ஆளில்லாமல் பறக்கும் டிரோன் எனப்படும் விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இவற்றை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தி பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
அதற்கு அடுத்தபடியாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர்களை தயாரித்தனர். தற்போது அதற்கும் ஒருபடி மேலாக சரக்குகளை சுமந்து செல்லும் 2 ஆளில்லா விமானங்கள்(டிரோன்) வடிவமைக்கப்பட்டுள்ளது.அவற்றுக்கு கேம்ப்ட்வையர், மரின் கார்ப்ஸ் என பெயரிட்டுள்ளனர். தற்போது இவை ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள கார்ம்சிர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரு ஆளில்லா விமானங்களும் இதுவரை 18 டன் சரக்குகளை சுமந்து சென்று இராணுவ வீரர்களுக்கு உதவி புரிகிறது. வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் மற்றும் எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை சுமந்து சென்று பத்திரமாக விநியோகம் செய்துள்ளது.ஆப்காஸ்தானில் ரோட் டோரங்களில் வெடி குண்டுகளை வைத்து தீவிரவாதிகள் வெடிக்க செய்கின்றனர். அதனால் சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் சேதமடைகின்றன. இராணுவ வீரர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மேஜர் கெயல் ஓ கான்னர் தெரிவித்தார்.