Tuesday, January 3, 2012

விண்டோஸ் இயங்குளத்தில் கடவுச்சொல்லை மாற்றம் செய்வதற்கு!


விண்டோஸ் இயங்குதளத்தில் பயனர் கடவுச்சொல்லை மாற்ற மிக எளிமையான வழி விண்டோஸ் இயங்குதளத்திலேயே உள்ளது.
நாம் சாதாரணமாக கடவுச்சொல்லை மாற்றும் போது முந்தைய கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னரே நாம் புதிய கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும்.ஆனால் முந்தைய கடவுச்சொல் இல்லாமலேயே புதிய கடவுச்சொல்லை உருவாக்க முடியும். இதனை செய்ய நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளின் உதவியையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடனே இதனை நாம் செய்ய முடியும்.


முதலில் my computer right side cick>அதில் Computer Management என்னும் சுருக்குவிசையை கிளிக் செய்யவும்.அடுத்து தோன்றும் விண்டோவில் Local Users and Groups > User என்னும் வரிசையை தெரிவு செய்யவும். அதில் உங்கள் கணணியில் உள்ள பயனர்களின் பட்டியல் தோன்றும். அதில் எந்த பயனரின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ, அந்த பயனர் பெயர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Set Password என்பதை தெரிவு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Proceed என்னும் பொத்தானை அழுத்தவும். பின் நீங்கள் மாற்ற நினைக்கும் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் தற்போது கடவுச்சொல் மாற்றப்பட்டதாக செய்தி வரும். இதே போல் நீங்கள் எந்த பயனர் கணக்கின் கடவுச்சொல்லையும் மாற்றிக்கொள்ள முடியும்.தற்போது கணணியை மறுதொடக்கம் செய்யுங்கள், கடவுச்சொல் மாற்றப்பட்டிருக்கும். 
இதுபோல் உங்கள் நண்பர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிவிட முடியும், எனவே கவனமாக இருப்பது நல்லது!!!!!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF