அரச பணியாளர்களுக்கு பொதுமக்களின் பணமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பொதுவான மனிதனாக கருதப்படும் அரச பணியாளர் ஒருவர் அரசாங்கத்தின் அரசியலை விமர்சிக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச பணியாளர்களால் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியும். எனினும், அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அழிக்கும் வகையில் செயற்படமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.அரச சேவையில் கட்சி பேதங்கள் பார்க்ககூடாது அதேநேரம், நடுத்தர மக்களுக்கு நாட்டை முன்னேற்றும் திறமை உள்ளதாகவும் பிரதமர் ஜயரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சி 20 தேர்தல்கள் தோல்வி! விசாரணை நடத்த வேண்டும்- சஜித் பிரேமதாச.
அதன் பின்னரே கட்சியில் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கி வரும் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லுவோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில் எவ்வாறான ஒழுக்காற்று விசாரணை நடத்தினாலும் கட்சியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்..
ஐக்கிய தேசியக் கட்சியில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்காக முழுஅளவில் போராடப்போவதாகவும் அநீதியான முறையில் எவரேனும் பழிவாங்கப்படுவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.பழிவாங்கும் எண்ணங்களை கைவிட்டு, கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடையே கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்காக முழுஅளவில் போராடப்போவதாகவும் அநீதியான முறையில் எவரேனும் பழிவாங்கப்படுவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.பழிவாங்கும் எண்ணங்களை கைவிட்டு, கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடையே கேட்டுக்கொண்டார்.
அபிவிருத்திக்கான நிதியை அரசாங்கம் கொள்ளையிடுகின்றது - சரத் பொன்சேகா.
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திக்கென ஒதுக்கும் பணத்தில் பாதியை கொள்ளையிட்டு மீதிப் பணத்திலேயே அபிவிருத்தியை மேற்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கிராமப் பகுதிகளின் குளங்கள், தொழிற்சாலைகள், பாதைகளை அமைக்க ஒதுக்கப்படும் பணத்தையே அரசாங்கம் களவாடுகின்றது. நாட்டு மக்களின் நலனுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களின் பணம் களவாடப்படுவதாகவும் அதனையே அபிவிருத்தி என அரசாங்கம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு நேற்று சென்று திரும்பிய போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு நேற்று சென்று திரும்பிய போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே மிக உயர்ந்த தொலைத்தொடர்புக் கோபுரம் கொழும்பில்! சீனா நிதியுதவி.
இதற்கான நிதியுதவியனை சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
350 மீற்றர் உயரத்தை கொண்ட இக் கோபுரம் தாமரைக் கோபுரம் என அழைக்கப்படும். ஆசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்புக் கோபுரமாக இது விளங்கவுள்ளது.இதன்மூலம் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கோபுரமானது 50 தொலைக்காட்சி சேவைகளுக்கும், 50 ஒளிபரப்பு சேவைகளுக்கும் 10 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 மாத காலத்தினுள் இக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காலமானார்.
இவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 பாதாள உலகக் குழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன: பொலிஸார்.
பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வகுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.குற்றச் செயல்களில் ஈடுபட்டு மறைந்து வாழ்வோரை கண்டுபிடிக்கும் நோக்கில் விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.புலனாய்வுப் பிரிவினரும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினாலும், பொலிஸார் நடத்திய தாக்குதல்களினாலும் இவ்வாறு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவான நிலையில் உள்ளது: கோதபாய ராஜபக்ஸ.
தொழில்சார் நிபுணர்கள் ஒன்றிய ஒன்றுகூடல் வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் வலுவான சக்திகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், சனல் 4 மற்றும் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடக நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரசாரங்களில் இறங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உள்ளக அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும், ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கவும் தொடர்ந்தும் சில சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்பதனை தொழில்சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.பல்வேறு தியாகங்களைச் செய்து ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து நாம் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சில நாடுகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர் ஒருவரை ஜப்பானுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு.
எனினும், குறித்த பணத்தை மாணவர் இதுவரை செலுத்தவில்லை என்று மனுதாரர் நிறுவனம் பொலிஸின் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாட்டை செய்தது.தற்போது மாணவர் இலங்கையில் உள்ளபோதும் அவரின் தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.இதன்போதே கோட்டை நீதிவான் நீதிமன்றம், சந்தேக நபரான மாணவரை ஜப்பானுக்கு செல்ல அனுமதிக்கவேண்டாம் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் அதன் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்கள் குறைக்கப்படுகிறது.அந்தக் குழு நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன்படி அவரது ஆண்டுச் சம்பளம் இனி 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைகிறது.
இருந்த போதிலும் அவர் தான் உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது. பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டொலர்களே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் பிரதமரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களாக இருக்கும்.அரசின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், இது குறித்து இருவார காலம் விவாதங்கள் நடைபெறும் என்றும், பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய நபர் கைது.
நியூயார்க் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்து வழிபாட்டு தலம், இஸ்லாமிய அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி உட்பட 4 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக நியூயார்க் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் மூலமும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த கார் எண்ணை வைத்தும் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள 40 வயதுள்ள அந்த நபர், நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவன் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி பல்பொருள் அங்காடி ஒன்றில் திருடியதற்காக வெளியேற்றப்பட்டான். அதே அங்காடியில் இவன் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது தனிப்பட்ட வெறுப்பு காரணமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக கூறியுள்ளான்.
77 வருடங்களுக்கு பின் தத்து கொடுத்த மகளை சந்தித்த 100 வயது தாய்.
பிறந்ததும் தத்து கொடுத்த தன் மகளை 77 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த 100 வயது தாய் அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்.டச்சு நாட்டை சேர்ந்த மின்கா டிஸ்ப்ரோ மிக சிறிய வயதிலேயே டாக்காவின் தென் பகுதியில் அகதியாக குடிபெயர்ந்தார்.
குடும்பத்தை விட்டு அனாதையான அவர், 8ம் வகுப்பு வரை படித்திருந்தார். டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்.கடந்த 1928ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்கா கொடுமைக்கு ஆளானார். இதில் கர்ப்பமுற்ற அவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால் அந்த குழந்தையை வளர்க்க போதிய அனுபவம் மற்றும் வயது இன்மையால் தத்து கொடுத்தார். சமீபத்தில் தன் மகளை பார்க்கும் ஆர்வத்தில் தொடர்ந்து தேடி வந்தார்.அவரது தேடல்களுக்கு பலனாக 77 ஆண்டுகள் கடந்த நிலையில் தன் மகளை கண்டுபிடித்துள்ளார். பெட்டி ஜேன் என்ற தன் பெயரை ரூத் லீ என்று மாற்றி கொண்ட மின்காவின் மகளும் தனது தாயை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
லீ நார்வே நாட்டை சேர்ந்த பாதிரியார் குடும்பத்தாரால் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். மார்க் லீ விண்வெளி வீராங்கணையாக பணியாற்றி வந்துள்ளார்.தனது பணிக் காலத்தில் 4 முறை விண்கலத்தில் சாகச பயணம் மேற்கொண்டதாகவும் 517 முறை உலகை சுற்றி வந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார் லீ.
கடந்த 2006ம் ஆண்டு தற்செயலாக பல முறை தாங்கள் இருவரும் சந்தித்து கொண்டதாக தெரிவிக்கும் லீ, ஆனால் உறவு முறை தெரியாமல் தான் இந்த சந்திப்புகள் நடந்ததாக கூறுகிறார்.தற்போது பேத்தி கொள்ளுப் பேத்திகளுடன் வாழ்ந்து வரும் லீ, 100 வயதில் தாயை சந்தித்த உற்சாகத்தில் இருக்கிறார். இவர்களுடைய சந்திப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சிஸ் நடைபெற்ற ஒட்டகங்கள் திருவிழா.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஒட்டகங்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் திகதி தொடங்கியது. நாளை வரை விழா நடக்கிறது. இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் கலந்து கொண்டுள்ளன.
ஒட்டகங்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.விழா அமைப்பாளர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் ஒட்டகங்கள் திருவிழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் 155 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வெற்றி பெற்ற ஓட்டகங்களை ஊக்குவிக்கும் விதமாக 8.16 மில்லியன் டொலர் மதிப்புள்ள பரிசுகள் அளிக்கப்படும். அழகு போட்டி, ஓட்ட பந்தயம் மட்டுமின்றி அவற்றின் ஆரோக்கியம், பாலின் தரம், தளிர் நடை என பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு மட்டுமின்றி அதன் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.கடைசி நாளன்று ஒட்டகங்கள் ஏலமும் இந்த கொண்டாட்டங்களில் களைகட்டும் என்றனர்.
பாரீஸ் ரயில் நிலையத்தில் தனியாக கிடந்த சூட்கேஸ்: ஊழியர் அதிர்ச்சி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நின்றிருந்த ரயிலில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடப்பதை பார்த்த ஊழியர் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உடனே காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.இதையடுத்து வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சோதனை செய்து பார்த்ததில் சூட்கேஸில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் 20 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.5 கோடி(இந்திய ரூபாய்) ஆகும். தங்க கட்டிகளில் அதிகாரபூர்வ முத்திரை எதுவும் இல்லை. எனவே காவல்துறை சோதனைக்கு பயந்து அவற்றை யாராவது விட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.தங்கத்தை விட்டு சென்றவரை கண்டுபிடிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கமெராவில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யாரும் வாங்க வரவில்லை என்றால் அரசுக்கு அந்த தங்கம் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் கடும் புயல்: இருவர் பலி.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழையுடன் கடும் புயல் வீசியது, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக்கு 2 பேர் பலியானார்கள்.இங்கிலாந்தின் டன்பிரிட்ஜ் வெல்ஸ் நகரில் வேன் மீது மரம் விழுந்ததில் அதன் டிரைவர் இறந்தார். புயலால் எழுந்த ராட்சத அலைகளில் சிக்கி இங்கிலீஷ் கால்வாயில் சென்ற சரக்கு கப்பல் ஆட்டம் கண்டது.அப்போது படுகாயமடைந்த கப்பல் சிப்பந்தி இறந்தார். மேலும் இரு ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்களை கடற்படை ஹெலிகாப்டர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன. இவை சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சாலைகளில் சென்ற வாகனங்களை புயல் தலைகீழாக புரட்டி போட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
துறைமுகங்கள் மூடப்பட்டன, கட்டிடங்கள் இடிந்தன, நாள் முழுவதும் விடாமல் மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.புயலுக்கு பிறகு மின்சாரம் இன்றி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரானின் அணு சக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம் என்று அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரிக் சன்டோரம் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் சன்டோரம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி அழிப்பேன். எனது காண்காணிப்பில் ஈரான் எந்த அணு ஆயுதத்தையும் தயாரிக்க முடியாது என்றார்.
ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.நா உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. எனினும் ஆயுதங்கள் தயாரிக்கவில்லை.மின் உற்பத்திக்காக அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. அத்துடன் யுரேனியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருளையும் நேற்று முன்தினம் அணு உலையில் செலுத்தி பரிசோதனையும் செய்து விட்டது.
கத்தாரில் தலிபான்களின் இணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவ அரசு சம்மதம்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைப்பது பற்றிய தலிபான்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் கடந்த 10 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.தற்போது தான் இது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இருதரப்பிலான பேச்சுவார்த்தை தொடர கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கையை ஆப்கான் அரசு ஏற்றுள்ளது.
சவுதி அரேபியா அல்லது துருக்கியில் அந்த அலுவலகத்தை அமைக்கலாம் என்ற அரசின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்து விட்டனர்.மேலும் குவான்டனமோ சிறையில் உள்ள தலிபான்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், தலிபான்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அவர்களை ஆப்கான் அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
கனடாவில் நிதிநிலை சிறப்பாக உள்ளது: கருத்துக்கணிப்பில் தகவல்.
கனடாவில் 64 சதவீதம் பேர் தங்களின் தற்போதைய நிதிநிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக கனடாவின் இம்ப்பீரியல் வர்த்தக வங்கி(CIBC) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
5 சதவீதம் பேர் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் நிதிநிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகின்றனர்.இந்த ஆய்வு கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது. அதில் 72 சதவீதம் பேர் இந்த ஆண்டில் தங்களின் நிதிநிலை எதிர்பார்த்த இலக்கை எட்டும் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
இந்த உறுதி 18-34 வயதினரிடையே 78 சதவீதமும், 55-64 வயதினரிடையே 68 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது அதிகரிக்கும் போது அவர்களின் நம்பிக்கை குறைகிறது. மேலும் மாநிலத்துக்கு மாநிலம் இந்த நிதிநிலை பற்றிய நம்பிக்கை மாறுபடுகிறது.ஆயினும் கனடா நாட்டினர் பலரும் தங்களுக்கென தனியாக ஒரு நிதிநிலை இலக்கை நிர்ணயித்து அதை அடைவதில் முழுமூச்சாக செயல்படுகின்றனர் என்று பாராட்டுத் தெரிவித்தார்.
பிரான்ஸ் அணுசக்தி மையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்பை மட்டும் அதிகரித்தால் போதும், அணு உலைகளை மூட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சு விபத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் அணு சக்தி குறித்து அச்சம் பரவியிருந்தது.அந்த அச்சத்தை விலக்கும் வகையில் அணுசக்தி மையங்களின் பாதுகாப்பு குறித்து ஒரு குழுவினர் பிரான்சில் ஆய்வு நடத்தினர்.
இதன் பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்பொழுது அதிகப்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அணுப் பாதுகாப்பு மையம்(ASN) அறிவித்துள்ளது.ஆறு மாதத்திற்குள் பாதுகாப்புக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் போது அணுமின் நிலையங்களில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
பிரான்ஸ் நாட்டில் 58 அணு மின் நிலையங்கள் உண்டு. இந்நாட்டின் 75 சதவீதம் மின்சாரத் தேவையை இந்த அணு மின் நிலையங்களே நிறைவேற்றுகின்றன.உலகிலேயே மின்சாரத் தேவைக்காக அணு மின் நிலையங்களையே அதிகமாக நம்பிக் கொண்டிருப்பது பிரான்ஸ் நாடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நாளிதழ் ஆசிரியரை மிரட்டிய ஜேர்மன் ஜனாதிபதி: உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.
ஜேர்மன் ஜனாதிபதி வாங்கிய வீட்டுக் கடன் பற்றிய விவரங்களை வெளியிட்ட பத்திரிகையை மிரட்டியதால், ஜனாதிபதி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜேர்மனி பத்திரிகைகள் குரல் எழுப்பியுள்ளன.ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப்(52) கடந்த 2008ம் ஆண்டில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் வீட்டுக் கடனாக ஐந்து லட்சம் யூரோ பெற்றார்.
அப்போது உல்ப் லோயர் சாக்சோனி மாகாண முதல்வராக இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் உல்ப் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜேர்மனியின் பிரபல பில்ட் என்ற நாளிதழ் உல்ப் வாங்கிய கடன் பற்றிய விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டது.கடன் விவரங்களை வெளியிட்டால் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வாய்ஸ் மெயில் மூலம், பத்திரிகை எடிட்டரை மிரட்டியுள்ளார்.
கடன் விவரங்கள் வெளியான ஓரிரு நாட்களில் மீண்டும் எடிட்டருக்கு வாய்ஸ் மெயில் அனுப்பிய ஜனாதிபதி தனது முந்தைய மிரட்டலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த விவகாரத்தை பில்ட் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய பத்திரிகைகள், ஜனாதிபதி மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
பினான்சியல் டைம்ஸ் டாயிட்ச்லேண்ட் பத்திரிகை, தனது தலையங்கத்தில் ஜனாதிபதி தனது பதவிக்கான அந்தஸ்தை காக்கத் தவறியதால் ராஜினாமா செய்ய வேண்டும்.இந்த தவறால் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது. இப்படிப்பட்டவர் ஜனாதிபதியாக நீடிக்கக் கூடாது என கூறியுள்ளது, ஜனாதிபதி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்டதாக, பல பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சீனாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நாடுகள்: சீன ஜனாதிபதி குற்றச்சாட்டு.
மேற்குலக நாடுகள் தங்கள் பண்பாடு மற்றும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் சீனா மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அதை சீனா அனுமதிக்காது என சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கான கொள்கை வடிவமைப்பு மாநாடு நடந்தது. அதில் சீன பண்பாட்டை கட்டிக் காப்பது, கட்சி மற்றும் மக்களின் கடமை என அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக அம்மாநாட்டில் பேசியதை சேர்த்து ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ எழுதிய கட்டுரை ஒன்று கட்சி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஹூ ஜிண்டாவோ எழுதியிருப்பதாவது: சர்வதேச விரோத சக்திகள் சீனாவை மேற்கத்திய மயமாக்கி அதன் மூலம் துண்டாடலாம் என கருதுகின்றன.அவை தமது ஊடுருவலுக்கு வாசலாக, பண்பாடு மற்றும் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கொள்கை ரீதியிலான இந்த போராட்டம் பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் சீனா தற்போது பலமாக இருப்பதைப் போன்று நமது பண்பாடும் சர்வதேச அளவிலான நமது செல்வாக்கும் அவ்வளவு பலமானதாக இல்லை.ஆனால் சர்வதேச அளவிலான மேற்கத்திய பண்பாடு மிகவும் வலுவாக இருக்கிறது. அதன் தாக்குதலை எதிர்கொள்ள சீனா தனது பண்பாட்டை கட்டிக் காக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
எகிப்தில் மூன்றாவது இறுதி கட்டத் தேர்தல்.
எகிப்தில் நாடாளுமன்றத்திற்கான மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீதான விசாரணையும் தொடங்கியது.எகிப்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இரு கட்டங்கள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், நேற்று மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடந்தது.
மொத்தம் ஒன்பது மாகாணங்களில் நடந்த இத்தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களித்தனர். இத்தேர்தல் இன்றும் தொடர்கிறது. முதல் இரு தேர்தல்களில், 62 சதவீதம் பேர் வாக்களித்தனர்.மூன்றாவது கட்ட தேர்தலில் ஒன்றரைக் கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு நேற்று முன்தினம் கெய்ரோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. சில காரணங்களால் நீதிபதி வழக்கை இன்று ஒத்தி வைத்தார். திட்டமிட்டபடி இன்று விசாரணை தொடங்கியது.
இதில் முபாரக், அவரின் இரு மகன்கள் கமால் மற்றும் அலா, முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி, ஆறு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்விசாரணை மூன்று நாட்கள் நடக்கும் எனத் தெரிகிறது.கடந்தாண்டு எகிப்தில் நடந்த புரட்சியின் போது, மக்களைக் கொல்லும்படி இராணுவத்தை ஏவியதாக முபாரக் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.இந்த பயிற்சியின் போது தரையில் இருந்து கடலில் உள்ள இலக்கைத் தாக்கும் காதர் ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் நாசர் ஏவுகணை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நூர் ஏவுகணை ஆகிய மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக ஈரான் அறிவித்தது. அதேபோல் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருள் கம்பிகளையும், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தயாரித்து விட்டதாகத் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் பயிற்சி மேற்கொள்வதாக தெரியவந்தவுடன் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் சி.ஸ்டென்னிஸ் என்ற போர் விமானந்தாங்கிக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவுக்குச் சென்று விட்டது.பஹ்ரைன் நாட்டில் அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. அங்கிருந்தபடி வாரம் அல்லது மாதம் என்ற சுழற்சி முறையில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பல் ரோந்து மேற்கொள்வது வழக்கம். அதன் படி தான் ஸ்டென்னிஸ் போர்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது.
ஈரான் கடற்படை தனது 10 நாட்கள் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரி அடாவுல்லா சலேஹி நேற்று விடுத்த அறிக்கையில், இந்த பயிற்சி காரணமாகத் தான் அமெரிக்க கப்பல் நீரிணையைக் கடந்து சென்றது. இனிமேல் அந்தக் கப்பல் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஈரான் அறிவுரை, பரிந்துரை மற்றும் எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து ஈரான் எச்சரிக்கை விடுக்காது என்றார்.இதற்கிடையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைப் போல, ஐரோப்பிய யூனியனும் இம்மாத இறுதிக்குள் விதிக்க வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது. இம்மாதம் 30ம் திகதி ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாடு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஏவுகணைகள் பரிசோதனை முடிந்துவிட்ட நிலையில் முதன் முறையாக ரஷ்யா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாடிம் கோவல் நேற்று அளித்த பேட்டியில்,ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் கிடையாது. இனி அதுபோன்ற ஏவுகணைகளை அந்நாடு எப்போதும் தயாரிக்கப் போவதுமில்லை என்றார்.
பாகிஸ்தான் இராணுவ வீரர்களை தாக்குவோம்: தலிபான்கள் அதிரடி.
பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்க வேண்டாம் என தலிபான் தலைவர் முல்லா ஓமர் உத்தரவிட்டதாக வந்த செய்தியை பாகிஸ்தானி தலிபான் மறுத்துள்ளது.தலிபான் தலைவர் முல்லா ஓமரின் வழிகாட்டுதலின்படி தலிபான்களின் மூன்று முக்கிய பிரிவுகள் ஒருங்கிணைந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்தக் குழுவுக்கு அறிவுரை கூறிய முல்லா ஓமர் பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்க வேண்டாம். அமெரிக்க, நேட்டோ படைகளைத் தாக்குங்கள் என உத்தரவிட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு தாரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானி தலிபான் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் கூறியதாவது: மவுல்வி நஜீர் தலைமையிலான குழு, ஹபீஸ் குல் பகதூர் தலைமையிலான குழு மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆகிய தலிபான்களின் மூன்று முக்கிய பிரிவுகள் ஒன்றிணைந்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான்.
இந்த ஒப்பந்தத்தின்படி இனி அப்பாவிகளைக் கடத்திக் கொல்வதை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால் பாகிஸ்தான் இராணுவம் மீதான தாக்குதல்களையோ, தற்கொலைத் தாக்குதல்களையோ நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை.ஹக்கீமுல்லா மெசூத் தலைமையிலான பாகிஸ்தானி தலிபான் அமைப்பு, எவ்வித போர் நிறுத்தத்தையும் அறிவிக்கவில்லை. அப்படி ஒரு திட்டமும் இல்லை. எனினும் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் பாகிஸ்தானி தலிபான் இணைந்து செயல்படும்.
பணத்துக்காக அப்பாவிகளைக் கடத்திக் கொல்லுதல், அமெரிக்காவுக்காக உளவு பார்ப்போரை கடத்திக் கொல்லுதல் ஆகிய இரு பிரச்னைகளைத் தீர்க்கத் தான் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் எங்கள் தாக்குதல்கள் தொடரும் என்று தெரிவித்தார்.இதற்கிடையில் தலிபானுக்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் ஒப்பந்தம் உருவாக்கப்படும். கடந்த காலத்தைப் போல் அல்லாமல், இப்போது மிகவும் கவனமாக இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.இதற்கு முன் தாரிக் இ தலிபானோடு பாகிஸ்தான் இராணுவம் மூன்று முறை ஒப்பந்தம் மேற்கொண்டு அத்தனையும் தோல்வி அடைந்தன. பேச்சுவார்த்தை குறித்து ஹக்கீமுல்லாவுக்கு தெரியாது என தெற்கு வஜீரிஸ்தானுக்கான தாரிக் இ தலிபான் தளபதி ரக்கீபுல்லா மெசூத் தெரிவித்துள்ளார்.