Saturday, February 25, 2012

அண்டவெளியில் மிதக்கும் திடமான காபன் கோளங்கள்: நாசா கண்டுபிடிப்பு!


நாசா விண்வெளி ஆராட்சி மையம், முதன் முதலாக அண்டவெளியில், திட கோள வடிவம் கொண்ட காபன் கோளங்களை கண்டுபிடித்துள்ளனர்.நாசாவின்’Spitzer’ தொலைநோக்கியின் உதவியுடன் இதனை கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.இது வரையில் அண்டவெளியில் வாயு வடிவிலேயே காபன் அணுக்கள் அறியப்பட்டிருந்த நிலையில், இக் கண்டுபிடிப்பானது விண்வெளி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.60 காபன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கோளவடிவில் ஒவ்வொரு காபன் திடப்பொருளும் உருவாகியுள்ளதாக நாசாவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நாசாவால் ‘buckyballs’ என பெயரிடப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF