
மூளைப் புற்றுநோய் கட்டிகளை சிதைப்பதில் வைட்டமின் சி மிகப் பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.அந்த ஆய்வில் மிக அதிகளவு வைட்டமின் சி எடுத்துக் கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும், அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் தெரியவந்தது.இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது உறுதி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF