
எத்தனை வயது வரை உயிருடன் வாழ்வோம் என்பதை மிகச் சாதாரணமான ரத்த பரிசோதனை மூலமாவே தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வாழ்நாள் காலம் மற்றும் முதுமை போன்றவை குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் எளிய ரத்த பரிசோதனை முறை விரைவில் அறிமுகமாக உள்ளது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பு செல்களை துல்லியமாக கணக்கிடுவதன் மூலமும், குரோமோசோம்களின் அளவு, அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்தவதன் மூலமும் ஒருவரது ஆயுட்காலம், உடல் பருமன், புற்றுநோய், இதய நோய்கள் உட்பட பல்வேறு எதிர்கால நோய் தாக்குதல்களை கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.எனவே முன்னெச்சரிக்கையாக இந்த நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் முடியும் என்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சவுத் வெஸ்டர்ன் மருத்துவ மைய செல் பயாலஜி பிரிவு வல்லுநர் ஜெர்ரி ஷே கூறியுள்ளார்.டாக்டர் ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவர் குழு இந்த புதிய ரத்த பரிசோதனை முறையை அறிமுகப்படுத்த உள்ளது. செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்ற குரோமோசோம்கள் மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து ஜெர்ரி கூறுகையில், விரைவில் அறிமுகமாக உள்ள புதிய எளிய ரத்த பரிசோதனை மூலம் முதுமை, ஆயுள் ஆகியவற்றுடன் எதிர்கால நோய்கள் குறித்த சாதக பாதகங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள இது உதவும்.சிலர் வயதானாலும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். ஒரு சிலர் சிறு வயதிலேயே வயதான தோற்றத்துடன் காணப்படுவார்கள். இதை பயலாஜிக்கல் ஏஜ், க்ரோனாலஜிகல் ஏஜ் எனப்படும். இதற்கான காரணங்களை இந்த சோதனையில் தெரிந்து கொள்ளலாம். விரைவில் இந்த ரத்த பரிசோதனை அறிமுகமாகும் என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF