இன்றைய நவீன உலகில், தொழில்நுட்பம் வளர்ந்து சென்றாலும், வளங்கள் மட்டுப்பட்டதாய் இருக்கின்றன. தற்பொழுது கார் பாவனை அதிகரித்துள்ளது. காரணம் சொகுசுப்பயண மோகமாகும். 4 பேர் பயணிக்க வேண்டிய கார்களில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரிபொருள் வீண்விரயம் ஆக்கப்படுகிறது.இதற்கு தீர்வு சொல்லும் வகையில், கார் போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட மோட்டார் சைக்கிளை கண்டிபிடித்துள்ளது அமெரிக்காவின் Lit Motors நிறுவனம்.இதில் மோட்டார் சைக்கிள் போல் இருவர் பயணிக்கலாம். ஏசி முதற்கொண்டு, காரில் உள்ள அத்தனை அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இவ்வகை மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகவும் அமையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF