Sunday, February 26, 2012

ஒரே கருவியில் பல செயற்பாடுக​ளை மேற்கொள்ள கூகுள் கண்ணாடிகள்!


இணைய உலகில் இமையமாக நிற்கும் கூகுள் ஆனது பல அம்சங்களுடன் கூடிய மூக்குக்கண்ணாடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இக்கண்ணாடியில் புகைப்படமெடுக்கும் கமெரா, திரை, ஹெட்போன் என்பன காணப்படுகின்றன. எனவே இவற்றை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முடிவதுடன், பாட்டுக்களையும் செவிமடுக்க முடியும்.இவற்றை விட விசேட அம்சம் என்னவென்றால் இணையவசதி கொண்ட இந்த கண்ணாடியானது செல்பேசிகளுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதுதான்.அதேநேரம் அதில் காணப்படும் திரையின் மூலம் எமது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் புதிய மின்னஞ்சல் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் அறியக்கூடியவாறு உள்ளது.கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் இந்த கண்ணாடிகள் தற்போதுள்ள 3G வலையமைப்பிற்கும் 4G வலையமைப்பிற்கும் இசைவாக தொழிற்படக்கூடியது.


இவ்வாறான பல வசதிகளை கொண்ட கூகுள் கண்ணாடியை அணிந்து கொண்டு பாதையை சரியாக இனங்கண்டு நடக்க முடியுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்! ஆம், துல்லியமாக பாதையை அல்லது முன்னாலுள்ள பொருட்களை பார்க்கக்கூடியவாறான ஔி ஊடுபுகவிடும் கண்ணாடிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.ஸ்மார்ட் போன்களுக்கு நிகராக கருதப்படும் இந்த கண்ணாடியின் பெறுமதியானது 380 யூரோவிலும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF