அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பனிக்கட்டிகள் அதிகம் இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.எனவே ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் இயந்திரம் மூலம் சுமார் 3,768 மீற்றர் ஆழத்துக்கு துளையிட்டனர்.அப்போது அதன் அடியில் ஏரி இருப்பது தெரியவந்தது. அந்த ஏரியின் மீது 2 கோடி ஆண்டுகளாக ஐஸ் மூடிக்கிடக்கிறது. அதில் சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF