
இரு ஈரானிய போர்க்கப்பல்கள் சிரியா Tartous துறைமுகத்திற்குவந்துள்ளதாக ரொய்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.ஈரானிய மீடியாக்களை ஆதாரம் காட்டி வெளியிடப்பட்ட இச்செய்தியில் சிரியா கடற்படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
சுவெஸ் கால்வாயை கடந்து சென்றதையும் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துக்கொண்டதாக தெரியவருகின்றது.1979ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்குப் பின்னர் சுயஸ் கால்வாயை ஈரானிய போர் கப்பல்கள் கடப்பது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.கப்பல்கள் பயணம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதாக கருதப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF