Sunday, February 26, 2012

ஆபத்தான பக்ரீரியாக்​களை இனம்காண செல்போன் ஸ்கானர்!


வெற்றுக்கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகாளன பக்ரீரியா, வைரஸ் போன்றவற்றை கண்டறிவதற்கு மருத்துவத்துறையில் நுணுக்குக்காட்டிகளை பயன்படுத்துவர்.இருப்பினும் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் செல்போன்கள் மூலம் மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் பக்ரீரியாக்களை இனம்காணக்கூடிய கருவி ஒன்று ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்காக செல்போனின் கமெராவுடன் சமாந்தரமாக வில்லைகள்(lens) பொருத்தப்பட்ட விசேட கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனால் மிக நுண்ணிய பொருட்களை அவதானிக்கக்கூடியவாறு இருப்பதுடன் விரைவாக செயற்படக்கூடியதாவும் காணப்படுகின்றது.இக்கருவி மூலம் முதன்முறையாக ஈ-கோலி பக்ரீரியாக்களை அவதானித்த போது அது சிறப்பாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF