Monday, February 20, 2012
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்!
விண்வெளியில் காணப்படும் கறுப்பு நிற ஓட்டையால் பெரிய விண்மீன்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பூமியில் இருந்து 29 கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் கூட்டத்தில் கருப்பு நிற ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சியும் மேற்கொண்டனர்.
மேலும் விண்வெளியில் காணப்படும் விண்மீன்கள் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இந்த கருப்பு நிற ஓட்டைகள் மூலம் சிறிய விண்மீன்கள் அழியும் ஆபத்து ஏற்படும்.தொடக்கத்தில் இருந்தே சிறிய விண்மீன்களை அழிக்கும் கருப்பு நிற ஓட்டை மெல்ல மெல்ல பெரிய விண்மீன்களையும் அழிக்கும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF