அதன் அடிப்படையில் Hangout எனும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.முதலில் நேரடியாக Google+ Hangout மூலம் உங்கள் கூகுள் பிளஸ் வட்டத்திலுள்ளவர்களுடன் மட்டும் வீடியோ சட்டிங் செய்ய முடியாது. எனினும் இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இனந்தெரியாத 12 வரையானவர்களுடன் வீடியோ சட்டிங்கில் ஈடுபட முடியும்.உங்கள் நண்பர்களுடன் Google+ Hangout ஐ பயன்படுத்தி வீடியோ சட்டிங்கில் ஈடுபட வேண்டுமாயின் Hangout நீட்சியை குரோமில் நிறுவ வேண்டும்.
அவ்வாறு நிறுவியதும் addressbarல் நீல நிற icon ஒன்று தோன்றும். அதில் கிளிக் செய்வதன் மூலம் Google+ Hangout ஐ இயங்க செய்து அந்த நேரத்தில் ஓன்லைனில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுடன் சட்டிங்கில் இணைந்து கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி
Google+ Hangout இன் நன்மைகள்
1. விரைவாக சட்டிங்கில் இணைந்து கொள்ள முடிதல்.
2. அவசியமானவர்களின் வரிசையில் நண்பர்களை ஒழுங்குபடுத்த முடிதல்.
3. வரையறை அற்ற, வரையறைக்கு உட்பட்ட ஓன்லைன் சட்டிங் நடவடிக்கைகளை அறியக்கூடியதாக இருத்தல்.
4. பாதுகாப்பானதாக காணப்படுதல்.