
மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது விண்டோஸ் மென்பொருளை மறுசீரமைப்பு செய்துள்ளது.1985ஆம் ஆண்டு விண்டோஸ் லோகோ உருவாக்கப்பட்டது. 4 வண்ணக் கொடி பறப்பது போன்ற இந்த லோகோவில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வந்தது.தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய லோகோவுடன் விண்டோஸ் 8 வெளியாக உள்ளது.புதிய லோகோ 4 வண்ண கொடி பறப்பதற்கு பதிலாக ஒரு ஜன்னலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெளவுல் ஸெர் என்பவர் வடிவமைத்துள்ளார்.“விண்டோஸ் என்ற பெயருக்கேற்பவே சாப்ட்வேரின் லோகோவை வடிவமைத்திருக்கிறோம்” என்று மைக்ரோசாப்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.